டெட் விவகாரம் விவாதிக்க பிரதமர் அழைப்பு என்சிடிஇ தலைவர் தகவல் Prime Minister calls for discussion on TET issue - NCTE Chairman informs
புதுடில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் பங்கஜ் அரோரா, உறுப்பினர் செய லர் அபிலாஷா ஜா மிஸ்ரா மற்றும் அனைத்து செயலா ளர்கள் அடங்கிய குழுவி னரை, அகில பாரத தேசிய கல்விக் கூட்டமைப்பு (ஏபிஆர்எஸ்எம்) அமைப் புச் செயலாளர் மகேந்திர கபூர், பொதுச் செயலாளர் கீதா பட், தேசிய ஆசிரியர் சங்க தமிழக பொதுச் செயலாளர் கந்தசாமி ஆகி யோர் அடங்கிய குழு நேரில் சந்தித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து மாநிலங்களில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (ஆர்டிஇ) அமலுக்கு வந்த நாளுக்கு முன்பு நிய மனம் பெற்ற ஆசிரியர் புதுடில்லியில், தேசிய ஆசிரியர் கல்விக்குழும தலைவர் மற்றும் உறுப்பினர்களை, அகில பாரத தேசிய கல்விக் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஆசிரியர் சங்க தமிழக பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் சந்தித்து ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தினர். களுக்கு விலக்கு அளிக்க மனு அளித்து வலியுறுத் தினர். அப்போது ஆசிரியர் சங்க குழுவினர் அவர் களிடம் கூறியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வை முன் தேதியிட்டு நடை முறைப் படுத்தக்கூடாது. இவ்வாறு நடைமுறைப் படுத்துவது அரசியல மைப்பு சட்டத்தின் அடிப் படை உரிமைகளை மீறும் செயலாகும். 23.08.2010 நாளிட்ட என்சிடிஇ அறி விக்கையில் குறிப்பிட்ட வாறு அதற்கு முன் நிய மனம் பெற்ற, நியமனம் பெற நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட அனை வரது பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு உறுதி செய்ய வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றவர்களை பொறுத்த வரை அந்தந்த மாநில அரசுகள் செயல்முறைகள் வெளியிட்ட நாளுக்கு முன்பு வரை நியமனம்
பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் சுப் ரீம்கோர்ட்டில் என்சிடிஇ மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வழிவகை களை ஆராய வேண்டும். மத்திய அரசுக்கு உரிய சட்ட திருத்தம் செய்யும் வகையில் என்சிடிஇ கருத் துருக்களை வேண்டும். அனுப்ப புதிதாக நடத்தப்படும்
தகுதி தேர்வுகளில் அந்தந்த பாடங்களிலும், கல்வி உளவியலிலும் மட்டுமே பாடத்திட்டம் இருக்க வேண்டும்", என வலியு றுத்தினர். கோரிக்கைகளை கேட்டு கொண்ட தலைவர் பங்கஜ் அரோரா, "இது குறித்து மத்திய கல்வி அமைச்சருடன் விரைவில் ஆலோசனை செய்ய உள் ளோம். ஏற்கனவே, ஏபி ஆர்எஸ்எம் சார்பில் பிர தமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து நவ. 18ல் விவாதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்சிடிஇ ஆசிரியர் ஆதரவான நலனுக்கு நிலையை உறுதி செய்யும். உங்களது கோரிக்கைகளை உரிய சட்ட வல்லுனர் களுடன் கலந்து பேசி தெரி விக்கப்படும்", என்றார்.
இத்தகவலை, தேசிய ஆசிரியர் சங்க தமிழக பொதுச்செயலாளர் கந்த சாமி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.