Grama Sabha Meeting on 01-11-2025 - Agenda Grama Sabha Meeting to be held on Local Government Day 01-11-2025 - Agenda
CLICK HERE TO DOWNLOAD Grama Sabha Meeting to be held on 01-11-2025 - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, Dated : 23-10-2025 PDF
கிராம சபைக் கூட்டம் உள்ளாட்சிகள் தினம் 01-11-2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடிதம்,
நாள் : 23-10-2025
Grama Sabha Meeting on 01-11-2025 - Agenda
அனுப்புநர்
திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., ஆணையர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை,
சென்னை -15.
ஐயா/அம்மையீர்,
பொருள்:
பார்வை:
ந.க.எண்.702/2025/ப.ரா(நி)2.1,
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர், அனைத்து மாவட்டங்கள்.
நாள்.23.10.2025
கிராம சபைக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் - 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்திட தெரிவிக்கப்பட்டது கூடுதல் கூட்டப் பொருள்கள் அனுப்புதல் - தொடர்பாக.
1. அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி1) துறை, நாள் 19.11.1998.
2. அரசாணை (நிலை) எண்.130, ஊரக வளர்ச்சி . மற்றும் வளர்ச்சி : மற்றும் ஊராட்சித் (சி4) துறை, நாள்.25.09.2006. 3. அரசாணை (நிலை) 6T 600T.65, ஊரக ஊராட்சித் (ப.ரா.2) துறை, நாள்.24.05.2022.
4. அரசாணை (நிலை) 6T 600T.86, ஊரக வளர்ச்சி ஊராட்சித் (ப.ரா.2) துறை, நாள்.15.07.2022.
5. இவ்வியக்கக இதே எண்ணிட்ட கடிதம், நாள்.17.10.2025: 6. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் நிறுவனம், சென்னை அவர்களின் ந.க.எண்.0372/B3/2020, நாள்: 17.10.2025.
பார்வையில் காணும் அரசாணை/கடிதங்களை காணவும். மற்றும் மேம்பாட்டு கடித பார்வை3-ல் கண்டுள்ள அரசாணையின்படி, 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்திற்கு, அனைத்து மாவட்டங்களுக்கும் 8 கூட்டப் பொருள்கள் பார்வை -5 ல் காணும் இவ்வியக்கக கடிதம் மூலம் அனுப்பப்பட்டது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட கூட்ட பொருள்களுடன் தற்போது டுதலாக வரபெற்ற கூட்டப்பொருள்களும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது: இணைப்பு: கூட்டப் பொருள்.
ஒம்/-பii பொன்னையா, ஆணையர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ashions ஆணையருக்காக நகல்
1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 09.
2. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-35.
3. கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து மாவட்டங்கள். 4. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), அனைத்து மாவட்டங்கள்.
01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய கூட்டப் பொருள்கள் விவரம்
பொருள் 1 : கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
கிராம ஊராட்சிகளில், 01.04.2025 முதல் 31.10.2025 முடியவுள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை படிவம் 30 மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்து காண்பித்து ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
2025-26 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம்:
வ.எண்.
திட்டத்தின் பெயர்
பணியின் பெயர்.
மதிப்பீடு ரூ.
தற்போதைய நிலை
பொருள் 2 :கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை
கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
பொருள் 3 : ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்: ஒரு மழை நீரினை சேமிப்பதினை முனைப்புடன் செயல்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட்டு மழைநீர் சேகரிப்பினை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும், எதிர்வரும் பருவமழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் பொருட்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக்கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும்.
ஏற்கனவே, நிறுவப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அடைப்புகள் ஏதுமின்றி முறையாக முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது எனவும் உறுதி : செய்திடப்பட வேண்டும். பொருள் : 4 கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உறுதி செய்தல். அனைத்து குக்கிராமங்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளுதல், அனைத்து அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல்.
சுத்தான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி, தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல். (பிரதி மாதம் 5ம்தேதி மற்றும் 20ம் தேதி) தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் உற்பதியாவதை தடுத்தல்.
1. தெளிந்த நீர்த்தொட்டி கொசுக்கள்
2. பயன்பாடற்ற பானைகள்
3. குளிர்சாதன பெட்டி பின்புறம்
4. பழைய டயர்
5. தேங்காய் மட்டைகள்
பின்வரும் பொருட்களில் 6. செடிகள் வளரும் தொட்டி
7. புதிய கட்டுமான பணிகள் : நடக்குமிடங்கள் மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமலும், அவற்றை முறையாக அகற்றியும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளளுதல்.
பொருள்5: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள கீழ்க்கண்டவற்றை பின்பற்றுதல் குறித்து கிராம சபையில் விவாதித்தல் வேண்டும்.
5. 1. தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளங்கண்டு அவ்விடங்களில் மழைநீர் தடைபடாமல் செல்லும் வகையில் வழியேற்றுதல்.
2. புயல் பாதுகாப்பு மையங்களை முறையே சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்தல் வேண்டும். மேலும் புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர் வசதி, மின் வழக்கு வசதி மற்றும் கழிப்பிட வசதி போன்றவற்றை முறையே பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்தல்.
3. பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கிநீர் வழிந்தோடுவதற்கான வகையை மழை .ஏற்படுத்துதல் 4. தேவையான மணல் மூட்டைகள் சவுக்கு கட்டைகள் போன்றவற்றை / .தயார் நிலையில் வைத்திருத்தல் பாசன ஏரிகள், குட்டைகள், குளம் போன்றவற்றின் கரைகளை கண்காணித்தல்.
6. மாவட்ட நிர்வாகம் மூலம் அவ்வப்போது தரப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
பொருள் 6 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். (அ) 2025-26-ம் ஆண்டுக்கான, தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை, 31LD தேதி வரையிலான: முன்னேற்ற : அறிக்கையுடன் ஒப்பிட்டு அக்டோபர் விவாதித்தல்.
வ.எண். (1) 2025-26 (31.10.2025 வரை) உருவாக்கப்பட்ட மனித சக்தி நாட்கள் (2) மேற்கொள்ளப்பட்ட செல்வினம் (3) (ஆ) 2026-27-ம் ஆண்டுக்கான, தொழிலாளர் வரவு-செலவு திட்டத்திற்கு பணிகள் தேர்வு செய்து விவாதித்து கிராம சபையின் ஒப்புதலுக்கு சமர்பித்தல் வேண்டும்.
பொருள் 7: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II அ .2024-25 ஆம் ஆண்டு மாநில நிதியின் கீழ் (இரண்டாம் கட்டம்): சிறு பாசன எரிகளை புதுப்பிக்க தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முலனேற்றம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
ஆ. 2025-26 ஆம் ஆண்டு அரசு சாரா/ கல்வி நிறுவனங்கள் மூலம் சிறு பாசன எரிகளை புதுப்பிக்க தேர்வு. செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். பொருள் 8: தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்:
தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், வழிகாட்டு நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டில் உள்ள 12,480 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகள் "ODF Plus Aspiring" என அறிவிக்கப்பட்டு, பின்னர் அவை ODF Plus என்ற நிலையான திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைப்பதோடு, கூடுதல் நிலையான திட அல்லது திரவக்கழிவு மேலாண்மை வசதிகளைக் கொண்ட ஊராட்சிகள் "ODF Plus Aspiring" என்ற நிலையை அடைந்தன. அதன் அடுத்த கட்டமாக திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை வசதிகளைக் கொண்ட கிராம ஊராட்சிகளில் தற்போது கிராம ஊராட்சிகள் "ODF Plus - Aspiring" நிலையிலிருந்து, "ODF Plus -Rising" என்ற நிலையையும், "ODF Plus -Model Village" என்ற நிலையையும் அடையப்பெற்ற பின்னர், அனைத்து இலக்குகளையும் எய்திய ரொம ஊராட்சிகளை கிராம சபையில் தீர்மானம் இயற்றி அவ்வூராட்சிகளை மேற்குறிப்பிட்டவாறு வகைப்படுத்தி அறிவிப்பு செய்திடல் வேண்டும்.
எனவே, கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் வழிகாட்டு நெறிமுறைகளின் படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் இலக்குகள் எய்தி ODF Plus - Aspiring நிலையில் உள்ள ஊராட்சிகளின் தகுதிகளுக்கேற்றபடி கிராம ஊராட்சிகளை 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபையில் கீழ்க்கண்டவாறு தீர்மானப் பொருள் சேர்க்க தெரிவிக்கப்படுகிறது. 1. ODF Plus Rising Village திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையில் இருந்த ஊராட்சி, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை வசதிகளைக் கொண்ட ஊராட்சி தூய்மையில் உயரும் ஊராட்சி (ODF Plus அறிவிக்கப்படுகிறது.
2. ODF Plus Model Village — Rising) என திடமற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற-- கிராம : ஊராட்சி, பார்வைக்கு தூய்மையாக விளங்குவதால் "முன்மாதிரி ஊராட்சி (ODF Plus – Model Village)"என அறிவிக்கப்படுகிறது.
பொருள் 9; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கூட்டமைப்பு பதிவுகளை புதுப்பித்தல் குறித்து விவாதித்தல். - ஊராட்சி அளவிலான அளவிலான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார கூட்டமைப்புகளின் பதிவுகளை (Renewal of Registration) புதுப்பித்தல் மற்றும் 2024-25 தணிக்கை அறிக்கை தகவலுக்காக கிராம சபையில் வைத்தல் வேண்டும்.
பொருள் 10 b நலம் தொடர்பான பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல்.
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளின் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள அனைத்து வளரிளம் மாணவ, மாணவியர்களுக்கு போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD Grama Sabha Meeting to be held on 01-11-2025 - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, Dated : 23-10-2025 PDF பொருள் 11 : மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல்.
அனைத்து மாவட்டங்களின் ஊரக பகுதிகளிலுள்ள பள்ளி கல்லூரிகளில் வளரிளம் மாணவ மாணவியர்களுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொருள் 12 : பாலினம் தொடர்பான பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல். சுய தமிழகத்தின் 37 மாவட்டங்களின் ஊராட்சிகளிலுள்ள மகளிர் உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊக்குநர் பிரதிநிகளுக்கு (A&R) பாலினம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொருள் 13 : சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் குறித்து விவாதித்தல்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையினை பயன்படுத்தி கீழ்கண்ட நன்மைகள் பெறலாம்.
அடையாள அட்டை பெற்றுள்ள SHG உறுப்பினர்கள், நகரப் பேருந்துகள் மற்றும் மொஃபுசில் பேருந்துகளில், அதிகபட்சம் 25 கிலோ வரை (SHG தயாரிப்புகள்) இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அட்டை முதன்மை SHG அடையாள உறுப்பினர் அடையாள ஆவணமாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பயன்பாட்டிற்காகக் கருதப்படும். (ஏற்கனவே (CMCHIS) வழங்கப்பட்டுள்ள இடங்களில் பொருந்தும்).
அடையாள அட்டை பெற்ற SHG உறுப்பினர்கள், கோ-ஆப்டெக்ஸ் துறையில் பொருட்கள் வாங்கும்போது, நிலவும் தள்ளுபடிகளுக்கு மேலாக கூடுதல் 5% தள்ளுபடி பெறுவர்.
அடையாள அட்டை பெற்ற SHG உறுப்பினர்களுக்கு, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கும் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும். அடையாள அட்டை பெற்ற SHG உறுப்பினர்கள் ஆவின் நிறுவனப் பொருட்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம். பொருள் 14 : தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் குறித்து விவாதித்தல்.
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக, தகுதி பெற்ற இளைஞர்களுக்கு (18 முதல் 35 வயதுடையவர்கள்) வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் தொடர்பாக தகவல் தெரிவித்தல் மற்றும் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் கோருதல் வேண்டும்.
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 100-இளைஞர் திறன் திருவிழாக்கள் / வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்து விளக்குதல் வேண்டும்.
திறன் பயிற்சி வேண்டுவோர் மற்றும் நேரடி வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களை இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெறுவது குறித்து தகவல் தெரிவித்தல் வேண்டும்.
பொருள் 15 :ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் குறித்து விவாதித்தல்.
சுய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் ஊரக பயிற்சி நிறுவனங்களின் (RSETI) வாயிலாக வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்களை சுய விண்ணப்பிக்க அறிவுறுத்தல் வேண்டும். 2025-26 ஆம் ஆண்டில் அலுமினிய வடிவமைப்பு. தச்சு வேலை, செல்போன் பழுது பார்த்தல், வீட்டு உபயோக பொருட்கள் பராமரிப்பு, வீட்டு வயரிங், ஓட்டுனர் உரிமம், கொத்தனார் மற்றும் கான்கிரீட், பிளம்பிங், இருசக்கர வாகன மெக்கானிக், வெல்டிங் ஆகிய பிரிவுகளில் இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப்பின், சுயதொழில் மேற்கொள்ள தேவையான கடன் உதவியும் வங்கிகள் மூலமே வழங்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
விருப்பமுள்ள 18 முதல் 50 வயதுள்ள பயனாளிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயன்பெறுவது குறித்து தகவல் தெரிவித்தல் வேண்டும்.
பொருள் 16 இதரப் பொருள்கள்
கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிறபொருட்கள் ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம்.
CLICK HERE TO DOWNLOAD Grama Sabha Meeting to be held on 01-11-2025 - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, Dated : 23-10-2025 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.