கல்லூரி மாணவர் தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியர் கைது College student commits suicide: Government school teacher arrested
பேராவூரணி, அக். 25:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கல்லூரி மாணவர் தற் கொலை விவகாரத்தில் மல்லிப் பட்டினம் அரசுப் பள்ளி ஆசி ரியர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். சேதுபாவாசத்திரம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20). மல்லிப்பட்டினம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து, தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத் தில் பொறியியல் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடு முறைக்காக ஊருக்கு வந்த இவர், மல்லிப்பட்டினம் அரசு மேல்நி லைப் பள்ளி வளாகத்தில் வெள் ளிக்கிழமை வேஷ்டியில் தூக் கிட்டு அறுந்து கீழே விழுந்து இறந்த நிலையில் கிடந்தார். சட லத்தின் அருகே ‘என் சாவுக்கு காரணம் பாபு' என எழுதப்பட் டிருந்தது.
சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரணையில் பாபு (40) என்பவர் அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் என்பதும், இருவரிடையே நெருக் கமான நட்பு இருந்ததும் தெரியவந் தது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக பாபு மீது போலீ ஸார் வழக்குப் பதிந்து, கைது செய்து, பேராவூரணி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.