RTE - The Right of Children to Free and Compulsory Education Act தமிழகத்தில் 82 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 25, 2025

RTE - The Right of Children to Free and Compulsory Education Act தமிழகத்தில் 82 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

What is the meaning of RTE?

RTE stands for Right to Education, which is most commonly known as the Indian law guaranteeing free and compulsory education for children aged 6 to 14. In a different context, RTE can also stand for Run-Time Environment in software engineering, which is the environment where a program is executed.

Who is eligible for RTE admission in UP?

Eligibility for the Right to Education (RTE) in Uttar Pradesh primarily requires the child to be from a disadvantaged group and have an annual family income below a specified limit. The standard age criteria for the RTE Act is between 6 and 14 years, but states often set specific age requirements for different entry points, such as pre-primary or class 1, with a typical requirement for the child to be around 6 years old as of April 1st

What is the RTE school scheme?

Provisions under Right to Education Act (RTE) Act, 2009

The government schools shall provide free education to all the children and the schools will be managed by School Management Committees (SMC). Private schools shall admit at least 25% of the children in their schools without any fee.

RTE என்பது "கல்வி உரிமைச் சட்டம்" (Right to Education) என்பதன் சுருக்கமாகும். இந்தச் சட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்குமான அடிப்படை உரிமையான இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் மூலம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை இலவசமாகப் பெறுவதை அரசு உறுதி செய்கிறது



தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 82 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் RTE - 82 thousand students apply under the Right to Free and Compulsory Education Act in Tamil Nadu

அக்.31-ல் குலுக்கல் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

நடப்பாண்டு இலவசக் கட் டாயக் கல்வி உரிமைச் சட்டத் தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். இதற்கான குலுக் கல் தேர்வு முறை அக்.31-ல் நடைபெறும் என பள்ளிக்கல் வித் துறை தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங் களில் ஏழைக் குழந்தைகள்சேர்க் கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட் சம் குழந்தைகள் தனியார் பள் ளிகளில் படிக்கின்றனர்.

இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது.

இதுகுறித்த வழக்கில் உயர் நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் அறிவுறுத்தியதை யடுத்துமத்திய அரசுநிதியைவிடு வித்தது. இதையடுத்து பள்ளி களில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர் களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன் படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒதுக்கப்பட்ட இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள

மாணவர்களின் சேர்க்கை அக். 30-ல் நடைபெறும். ஒதுக்கீட்டை விட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன் குலுக்கல் முறையில் அக். 31-ம் தேதி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த சேர்க்கை செயல்முறை பள்ளிக்கல்வித் துறை வலைத் தளம் மூலம் வெளிப்படையாக செயல்படுத்தப்படுகிறது இதை மாவட்டக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்புக் குழுக்கள் மேற் பார்வையிடுவார்கள். ஆதரவற் றோர், எச்ஐவி பாதித்தோர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத்திற னாளிகள், துப்புரவுத் தொழிலா ளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.