அரசுப் பள்ளிக்கு 33 சென்ட் நிலம் தானமாக வழங்கல் Donation of 33 cents of land to a government school
ஒரத்தநாடு, அக்.25: ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் தலைமையா சிரியராக பணியாற்றியவரின் குடும்பத்தினர், அவர் பணியாற்றிய பள் ளிக்கு 33 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர் ரத்னசபாபதி. இவரது மனைவி கலையரசி (57). இவர்களுக்கு மகன்கள் விஜயராகவன், கோவிந்தராஜ், மகள்கள் சுபா, பத்மபிரியா ஆகியோர் உள்ளனர். தற்போது கண்ணுக்குடியில் வசித்து வருகின்றனர்.ரத்னசபாபதி கடந்த 2021-ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில், ரத்னசபாபதிக்கு சொந்தமான 33 சென்ட் நிலம் (14,373 சதுர அடி), அரசுப் பள்ளியின் அருகில் இருந்தது. இதனை ரத்னசாபா பதி குடும்பத்தினர்,பள்ளிக்கு தானமாக வழங்க முடிவு செய்தனர். இதன் பேரில், அந்த இடத்தை வெள்ளிக்கிழமை பாப்பநாடு சார்-பதிவாளர் அலுவலகத்தில்,பள்ளியின் பெயரில், நிலத்தை குடும்பத்தினருடன் தான மாக எழுதிக்கொடுத்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.