அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 7, 2025

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்.

பணியிட மாறுதலுக்கு விண்ணிப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டுமல்லாது விடுதி காப்பாளர்கள், உடல்நிலை கல்வி ஆசிரியர்கள் என எல்லோரும் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எல்லா அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியுமா என்றால் இல்லை.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கான அறிவிப்பு இது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முழு அறிவிப்பு : 2025 — 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு 12.06.2025 மற்றும் 13.06.2025 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறுதெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே பணியிட மாறுதலை எதிர்பார்த்து காத்திருந்த தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் தகவல்களுக்கு தங்களின் உயர் அலுவலர்கள் அல்லது ஆதிதிராவிடர் நலத்துறையை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.