ஆசிரியையிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது!
பாலக்கோட்டில் ஓய்வூதிய பலன்களை தர
ஆசிரியையிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி கைது - கையும், களவுமாக சிக்கினார்
பாலக்கோடு, ஏப்.30: பாலக் கோட்டில், ஓய்வூதிய பலன் களை பெற ஆசிரியையிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங் கிய கருவூல அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மபுரி மாவட் டம், பாலக்கோடு அல் ராஜூ கவுண்டர் தெரு வில் வசித்து வருபவர் கவிதா(50), சிக்கார்த்தன அள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கர்ப்பப்பை புற்றுநோய், பக்கவாதத்தால் பாதிக்கப் பட்ட கவிதா, தொடர்ந்து பணி செய்ய முடியாத சூழலில், விருப்ப ஓய்வு பெற்றார். இதனையடுத்து, அவருக்கு சேர வேண்டிய பண பலன்கள் ரூ.29.50 லட்சத்தை பெற வேண்டி முயற்சிகள் மேற்கொண்
டார்.
இதற்கு கல் வித்துறை அனுமதி வழங்கிய நிலை யில், பாலக்கோடு சார்நிலை கருவூ லத்தை அணுகி னார். அப்போது, பாலக்கோடு சார் நிலை கருவூலத்தில் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராக பணி யாற்றி வரும் ராமச்சந்தி ரன் (42) என்பவர். ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத் தால் தான். பணப்பலன் களை விடுவிக்க அனுமதி தர முடியும் என கூறியுள் ளார்.
ஆனால், லஞ்சம் தர விரும்பாத கவிதா. இது குறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி டிஎஸ்பி நா நாகராஜ னிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீ சாரின் அறிவுரை யின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று மதியம் 3 மணி யளவில், கவிதா ராமச்சந்திரன், ராமச்சந்திரனிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது. அங்குமறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ். இன்ஸ்பெக்டர் பெருமாள் கொண்ட குழுவினர், சார் நிலை கருவூல அலுவலர் ராமச்சந்திரனை, கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தை பறிமு தல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்
Thursday, May 1, 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.