பள்ளிகள் திறக்கப்படும் தேதி - அமைச்சர் அன்பில் மகேஸ் புது அறிவிப்பு
பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பேட்டி அளித்த அவர், “கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளோம். அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் பொறுத்து முதலமைச்சர் அலுவலகம் சொல்வதன் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வாங்க கூடாது. ஆணையம் நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், “இவ்வாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.