தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஆண்டு கட்டிய வருமான வரி எவ்வளவு? - RTI Reply
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுக்கு மாதத்துக்கு சராசரியாக 375 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகின்றனர்
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிய விவரத்தில் பதில்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மாநில அரசு வழங்குகிறது. இவர்கள் பெறும் ஊதியத்திற்கான வருமான வரி ஒன்றிய அரசுக்கு செல்கிறது. இதற்கு முன்பு வரை ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒரு ஊழியர் பெறும் ஊதியத்தை கணக்கிட்டு வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி செலுத்தி வந்தனர். ஆனால் ஊதியம் பட்டுவாடா செய்வதற்கு IFHRMS முறை அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டிலிருந்து இந்த செயலி மூலம் கணக்கிடப்பட்டு மாதம் தோறும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் அவர்களிடம் கீழ்க்கண்ட தகவல்களை கடந்த 25.11.24 ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தோம்
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு 2024 செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட மொத்த ஊதியம் எவ்வளவு? பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி எவ்வளவு?
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு 2024 அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட மொத்த ஊதியம் எவ்வளவு? பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி எவ்வளவு?
கருவூலம் மற்றும் கணக்கு துறை நான்கு மாதங்கள் கழித்து இதற்கான அளித்த விபரத்தினை 21.3.25 தேதியிட்ட கடிதம் மூலம் கிடைக்கப்பெற்றது.
அதில் கிடைத்த தகவல்கள்
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 2024 ல் வழங்கப்பட்ட ஊதியம் ரூபாய் 5938 கோடி. அதில் பிடித்தம் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு வருமான வரியாக செலுத்திய தொகை ரூபாய் 375 கோடி ஆகும்.
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 2024 ல் வழங்கப்பட்ட ஊதியம் ரூபாய் 6413 கோடி. அதில் பிடித்தம் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு வருமான வரியாக செலுத்திய தொகை ரூபாய் 399 கோடி ஆகும்.
Tuesday, April 8, 2025
New
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஆண்டு கட்டிய வருமான வரி எவ்வளவு? - RTI Reply
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.