புதிய பயிற்சி அளித்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு தேர்வு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 12, 2025

புதிய பயிற்சி அளித்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு தேர்வு?



Should teachers be tested every 3 years after providing new training? புதிய பயிற்சி அளித்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு தேர்வு?

ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய பயிற்சி அளித்து தேர்வு நடத்த வேண்டும் என்று சுதா மூர்த்தி எம்பி பேசினார். மாநிலங்களவை நியமன உறுப்பினரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மனைவியுமான சுதா மூர்த்தி, கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது: ஆசிரியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நல்ல ஆசிரியர்கள் இல்லையென்றால் கல்வி முறை மேம்படாது. கல்லூரி அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்று, பி.ஏ., அல்லது எம்.ஏ., அல்லது பி.எச்.டி., படித்த பின் ஆசிரியர்கள் வேலையில் நுழைந்துவிடுகிறார்கள்.அதன்பின் அவர்கள் ஓய்வு பெறும் வரை தேர்வுகள் இல்லை.

இது நடக்கக்கூடாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதிய நுட்பம் அல்லது புதிய அறிவு தொடர்பான தேர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற மாட்டார்கள். நல்ல ஆசிரியராக வேண்டுமானால் அதற்கும் ஒரு விலை உண்டு. விலை பணமல்ல, ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி, தேர்வு. இவ்வாறு அவர் பேசினார். தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு எம்பி பவுசியாகான் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.