7.5 % இடஓதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 12, 2025

7.5 % இடஓதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.



The Directorate of School Education has been ordered to verify and send the details of students falling under the 7.5% reservation. 7.5 % இடஓதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.

7.5 % இடஓதுக்கீட்டின் கீழ் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் வரும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு. 7.5 % பார்வையில் அடிப்படையில் , இடஓதுக்கீட்டின் கீழ் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 1835456 மாணவ / மாணவிகள் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் 24646 மாணவ / மாணவிகள் விவரங்கள் உள்ளீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது . 7.5 % இடஓதுக்கீடு தெரிவு செய்யப்படாமல் 10. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க இயலாது . இதனை தொடர்ந்து , 7.5 % இடஓதுக்கீடு சரிபார்த்தல் EMIS வாயிலாக மேற்கொள்ள இருப்பதால் , 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் படித்த விவரங்களை தமிழ் வழி / ஆங்கில வழி விடுதலின்றி தெரிவு செய்து சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்த்து 7.5 Verification நிலுவைப்பட்டியலை தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் முடித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு : 10.03.2025 நாளின்படியான தரவுகள் விவரப்பட்டியல் ( மின்னஞ்சல் வழியாக )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.