குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 14, 2025

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC



குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC

TNPSC - குருப்-1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குருப்-1 பதவிகளில் (துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகள்) 90 காலியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 190 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.