2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Publication of guidelines for conducting school and district level competitions for children's films for co-curricular/non-academic activities for the academic year 2024-2025
2024-25 - ஆம் ஆண்டில் , பார்வையில் காணும் செயல்முறைகளின் படி நவம்பர் . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் 6 முதல் 9 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ன.
அதனை தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . அதன் பொருட்டு , அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் . பள்ளி அளவிலான போட்டிகளை அட்டவணை -1 ல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் போது , இதில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த நடுவர்களை தேர்ந்தெடுத்து உரிய முறையில் போட்டிகளை நடத்துதல் வேண்டும் . மேலும் , பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிலையிலான போட்டிகளை நடத்தும் போதும் , போட்டிகள் குறித்த விவரத்தினை போட்டி நடக்கும் தேதிக்கு முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்னதாக தெரிவித்தல் கூடாது
CLICK HERE TO DOWNLOAD movie screening Competition reg - PDF
Tuesday, February 4, 2025
New
2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.