மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 2, 2025

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை



Teachers demand that the central government pay salaries on par with postgraduate teachers - மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழகத்திலும் சம்பளம் வழங்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது;

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் மேல்நிலை வகுப்புகளைக் கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களில், 1.6.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14,000 முதுகலை ஆசிரியர்கள் பெரிதும் சம்பள முரண்பாடுகளோடு பணிபுரிந்து வருகிறார்கள்.

குறிப்பாக 1.6.2009 முன்னர் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட இவர்கள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய ரூ. 14,000 குறைவாக சம்பளம் பெறுகின்றனர். இது சார்ந்து ஏற்கனவே தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.

முதலமைச்சரை நேரில் சந்தித்தும் மனு அளித்துள்ளோம். தொடர்ந்து எங்கள் வழிகாட்டலில் தற்போது அதனுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இ-மெயில் மூலமாக மனு அனுப்பி உள்ளோம். தமிழக முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, முதுகலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும். 1978ம் ஆண்டு முதுகலை ஆசிரியர்களின் சம்பளத்திற்கும், கல்லூரி விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கும் 3.7 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. தற்போத இது 53.2 சதவீதத்தை தாண்டி உள்ளது.

மேலும் தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 11, 12ஆம் வகுப்பு பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களைவிட குறைவான சம்பளம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.

எனவே தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் இது குறித்து நடவடிக்கை எடுத்து, மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பான பேச்சு வார்த்தையை, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாககளுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் உடனடியாக நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.