களஞ்சியம் செயலியில் குளறுபடி வருமான வரி கணக்கில் சிக்கல்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள பட்டியல் வழங்கு வதில் குளறுபடியால் வரு மான வரி கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் களஞ்சியம் செயலி வாயிலாக சம்பள பட்டியல் தயார் செய்யப் பட்டு அதிலிருந்து கருவூ லம் வாயிலாக சம்பளம் வங்கி கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது.
இதில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக இது வரை வழங்கப்பட்டுள்ள சம்பள பட்டியல்களை பதி விறக்கம் செய்து கொள் ளலாம் என அறிவிக்கப் பட்டது. இதனை பெற்று இதுவரை மொத்தமாக பிடிக்கப்பட்ட வருமான வரி விபரங்கள் வாயிலாக வருமான வரி கணக்கு தாக் கல் செய்ய வேண்டும்.
களஞ்சியம் செயலியில் 2025 ஜன., மாதத்திற்கு இரு முறை சம்பளம் வழங்கியதாக பதிவிறக் கத்தில் இருந்தது. இது குறித்து அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
தற்போது எந்த தகவ லும் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக பதிவி றக்கம் செய்ய முடியாமல் வருமான வரி செலுத்திய விபரங்கள் தெரியாமல் வருமான வரி கணக்கு தாக் கல் செய்வதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.
Saturday, February 8, 2025
New
களஞ்சியம் செயலியில் குளறுபடி வருமான வரி கணக்கில் சிக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.