பட்டதாரி திறனறி தேர்வு - உயிரி தொழில்நுட்பம் (GAT-B) 2025 உயிரி தொழில்நுட்பதுறை (DBT), இந்திய அரசுஆனதுநோடல் ஏஜென்சி, பிராந்திய உயிரி தொழில்நுட்பமையம் (RCB), ஃபரிதாபாத் மூலம் பின்வரும் தேசிய தேர்வை அறிவிக்கிறது:-
பங்கேற்கும் கல்வி நிறுவனங்களில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதுகலை பட்டபடிப்பிற்கு ஆதரவளிக்கும் உயிரி தொழில்நுட்ப துறையில் மாணவர்களை சேர்ப்பதற்கான பட்டதாரி திறனறி தேர்வு உயிரி தொழில்நுட்பம் (GAT-B) தேர்வு.
உயிரி தொழில்நுட்பதுறை (DBT) இந்திய அரசுசார்பாக பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் (RCB), ஃபரிதாபாத் ஆனது தேசிய தேர்வு முகமை(NTA) மூலம் GAT-B 2025 தேர்வை நடத்துகிறது. NTA ஆனது ஒரு தன்னாட்சி, சுயசார்புமற்றும் தன்னிறைவு பெற்ற முன்னோடி தேர்வு நிறுவனமாக கல்வி அமைச்சகம் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. பாடத்திட்டம், காலம், மொழிவழி, தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதி அளவுகோல்கள், தேர்வு நகரங்கள், www.nta.ac.in/ https://dbt2025.ntaonline.in// www.reb.res.in இணையதளத்தில் ஏற்றப்பட்ட தகவல் குறிப்பேட்டில் விவரிக்கப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் GAT-B 2025க்கான விரிவான தகவல் குறிபேட்டினைப் படித்து, www.nta.ac.in/https://dbt2025.ntaonline.in/-ல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தையும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, நெட் பேங்கிங் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / யுபிஐ / வேலட் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் புதுப்பிப்புகளுக்கு அவ்வப்போது மேற்கண்ட இணையதளங்களைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் உதவிக்கு dbt@nta.ac.in க்கு எழுதவும் அல்லது 011-40759000 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.