ஆகாஷ் இன்விக்டஸ்' - AI உதவியுடன் JEE பயிற்சி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 13, 2025

ஆகாஷ் இன்விக்டஸ்' - AI உதவியுடன் JEE பயிற்சி!



ஆகாஷ் இன்விக்டஸ்' - AI உதவியுடன் JEE பயிற்சி!

ஐ.ஐ.டி., உட்பட உலகளவில் பிரபலமான கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக 'ஆகாஷ் இன்விக்டஸ்' எனும் உயர்தர ஜே.இ.இ., பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த தரவரிசையைப் பெற நினைக்கும் மாணவர்களுக்கான ஒரு மாறுபட்ட கல்விப் பயணமாகவும் இது அமைகிறது.

ஐ.ஐ.டி.,களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை சேர்த்த அனுபவம் பெற்ற மற்றும் ஜே.இ.இ., பயிற்சியில் சிறந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைத்து இதற்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ., பயன்பாடு

இந்த திட்டம் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்ற சிறந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, முன்னோடியான கற்பித்தல் முறைகள் நவீன தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுடன் இணைக்கிறது. குறிப்பாக, ஐ.ஐ.டி., தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு மிஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பயன்பாட்டில் துல்லியமாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரம்வாய்ந்த பாடத்திட்டங்கள் ஏ.ஐ.,யில் இணைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாணவரின் கற்கும் திறன் கண்காணிக்கப்படுவதோடு, தேர்வு வாயிலாக அவர்களுக்கு சவாலாக விளங்கும் பாடப்பகுதிகள் கண்டறியப்படுகிறது. அத்தகைய பாடப்பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, திறம்பட கற்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அடுத்தடுத்த நிலைக்கு அவர்கள் செல்லவும் ஊக்கம் அளிக்கப்படுகிறது.

இத்தகைய முயற்சிகளுக்கென மாணவர்களுக்கு தனி அப்ளிகேஷன், தேர்வுக்கான தளம் மற்றும் மாணவர்களின் கற்கும் திறனை காண்காணிக்க ஆசிரியர்களுக்கு பிரத்யேக அப்ளிகேஷன் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு வெற்றி, தோல்விகளை கையாளும் விதம் உட்பட பல்வேறு விதமான உளவியல் சவால்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஆன்லைன் வழி பயிற்சி

ஜே.இ.இ., போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற பிரத்யேக பயிற்சிகள் அவசியமாகும் நிலையில், பெரும்பாலான பள்ளிகளால் சராசரியான பயிற்சிகளை மட்டுமே வழங்க முடியும். ஆகவேதான், கிராமப்புற மாணவர்களும் பயன்படும் வகையில், இந்த உயர் தீவிர பயிற்சி திட்டம் டிஜிட்டல் வாயிலாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம், சந்தேகங்கள் தீர்க்கும் அமர்வுகள், விரிவான தேர்வு தொடர் ஆகியவற்றின் வாயிலாக அதிகபட்ச தேர்வு மதிப்பெண்களை பெற பயிற்சி பெறுவர். மேலும், 'ஆகாஷ் இன்விக்டஸ்' சிறிய மாணவர் குழுக்களாக பிரிக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிகிறது.

கூடுதலாக, இந்த திட்டத்தில் ஓலிம்பியாட் போட்டிகளுக்கான சிறப்பு பயிற்சி பட்டறைகள், முந்தைய ஜே.இ.இ., தேர்வு கேள்வி தாள் பதில்களுடன் விரிவான தொகுப்பு, ஜே.இ.இ., சேலஞ்சர் போன்ற சிறப்பு பயிற்சி திட்டங்களும் அடங்கும். இவை மாணவர்களின் வெற்றியை அதிகரிக்க உதவும்.

-தீபக் மெஹ்ரோத்ரா, நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட். support.invictus@aesl.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.