1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் உள்ளீடு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 3, 2025

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் உள்ளீடு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் உள்ளீடு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Procedures of the Director of Elementary Education regarding the entry of second semester aggregate marks for classes 1 to 5



2024-25ஆம் கல்வி ஆண்டு இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும்.

2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்த பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (eo மதிப்பெண்கள்) கேள்விவாரியாக 10.01.2025ஆம் தேதிக்குள் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் 15.012025ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங்களிலும் உள்ளீடு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டு உள்ளது செய்திடுமாறு இணைப்பில்

3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும் ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலரும் குறைந்தபட்சம் 10 பள்ளிகளின் பதிவுகளையும் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி) குறைந்தபட்சம் 5 பள்ளிகளின் பதிவுகளையும் சரிபார்த்திட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.