தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழக கல்வித்துறை? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 28, 2024

தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழக கல்வித்துறை?



தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழக கல்வித்துறை?

சமக்ரா சிக் ஷா திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இந்த ஐ.சி.டி.,யின் பல கோடி ரூபாய் நிதியை, வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது: மாணவர்களுக்கு கணினி அறிவியலை கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஆண்டு சம்பளமாக, 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்காக உயர்நிலையில் 6,454, நடுநிலையில் 8,209 என மொத்தம், 14,663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதில், 'இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்' பணியாற்றும் 8,200 தன்னார்வலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இது, மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது. இங்கு, தகுதியுள்ள பி.எட்., படித்த கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.