மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்! Teacher who wrote caste name in student's book dismissed!
பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார். மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயகுமார் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
அப்போது, குறிப்பிட்ட ஒரு இசைக்கருவியின் பெயரை குறிப்பிட்டு அந்த இசைக்கருவியை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் எனக்கூறி ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில், மாணவரின் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதி அனைத்து மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.