ஆசிரியர் பணிபாதுகாப்பு சட்டம் இயற்றணும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் கோரிக்கை
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் மல் லிப்பட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது ஆசிரியர் சமூகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூரத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் சமூகவிரோ திகள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக உள்ளது. இப்போது பள்ளிமேலாண்மைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியை ரமணியை, அவர் ஆசிரியர் அறையில் இருந்தபோதே படு கொலை செய்திருப்பது ஆசி ரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த அத்துமீறல்களை தடுக்கும் வகையில் எல்லாே அரசுப்பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஆசிரியர் பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.