'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' -அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்.
'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்.
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்ற மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அவுட்சோர்சி முறையில் எடுக்கக் கூடாது, முறையாக அறிவிப்பு வெளியிட்டு நிரந்தர பணியாளர்களாக எடுக்க வேண்டும்” என அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை.
Anna University-Engagement of Temporary Non-Teaching staff members on Daily Wages/Consolidated Pay - Revised Instructions - Issued.
Ref: 1. FC Res. No. 149.02 (A) of the 149th Finance Committee minutes, approved by the Syndicate videRes. No.272.4of its 272 meeting held on 24.10.2024. 2. Circular Ref.No.151/PR30/2024 dated 20.11.2024.
The Finance Committee vide its Resolution No.149.02 (A), in connection to the agenda on the engagement of Non-Teaching Temporary Staff members on Daily wages and Consolidated pay, among others, has resolved to engage manpower in various categories on outsourcing basis and to explore the possibility of reallocation of excess staff wherever needed In accordance with the above resolution, the circular issued in the reference second cited above is modified and the following instructions are issued;
New engagement of Temporary Non-Teaching staff members on Daily Wages/ Consolidated pay should be done by OUTSOURCING through Manpower agency only.
அண்ணா பல்கலை கழகத்தில் குத்தகை முறையில் ஆசிரியர்கள் நியமனம் கைவிடப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி! உண்மையை மூடி மறைக்க நிர்வாகம் முயலக் கூடாது! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதைக் கண்டித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி தான். ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது உண்மை. அதற்கு நான் கண்டனம் தெரிவித்த பிறகு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தான் அண்ணா பல்கலைக்கழகம் அதன் முடிவை மாற்றிக் கொண்டது. ஆனால், நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சுற்றறிக்கையில் தான் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது. அதுமட்டுமின்றி அதன் தவறு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடி ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய சுற்றறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கண்டித்திருக்காவிட்டால், ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை திணிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், குட்டு அம்பலமான பிறகு எதுவுமே நடக்காதது போன்று அண்ணா பல்கலைக்கழகம் நாடகமாடுகிறது. இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.