டிசம்பர் 3 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
டிசம்பர் 3 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை] அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நானாக அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத் திருவிழாவினையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு ஈடுசெய்யும் வகையில், டிச. 14 ஆம் தேதி வேலைநாளாக அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நவ. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த ஆலயத் திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சவேரியாரை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.