கிராம சபைக் கூட்டம் - 23.11.2024 அன்று நடைபெற உள்ளது!!
CLICK HERE TO DOWNLOAD கிராம சபைக் கூட்டம் - 23.11.2024 PDF
நவ. 23-ல் கிராம சபை!
நவ.1-ம் தேதி, ஊராட்சி தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம், நிர்வாக காரணங்களால் நவ.23-ம் தேதி ஒத்திவைப்பு !
ஊராட்சி க்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவ.23-ம் தேதி நடத்த உத்தரவு !
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளின் படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் இலக்குகள் எய்தி ODF Plus Aspiring நிலையில் உள்ள ஊராட்சிகளின் தகுதிகளுக்கேற்றபடி கிராம தெரிவிக்கப்படுகிறது. 1. ODF Plus Rising Village ஊராட்சிகளை கீழ்க்கண்டவாறு சேர்க்க திறந்த வெளியில் மலம் வசதிகளைக் கொண்ட கழித்தலற்ற நிலையில் இருந்த ஊராட்சி தூய்மையில் உயரும் ஊராட்சி, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை ஊராட்சி (ODF Plus - Rising) என அறிவிக்கப்படுகிறது. 2. ODF Plus Model Village திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி, பார்வைக்கு தூய்மையாக "முன்மாதிரி ஊராட்சி (ODF Plus - விளங்குவதால் Modol Village)" என அறிவிக்கப்படுகிறது. பொருள் 5: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அ) 2024-25-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை அக்டோபர் 31ம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல். வ.எண் (1) 2024-2025 (31.10.2024 வரை) உருவாக்கப்பட்ட மனித சக்தி நாட்கள் (2) மேற்கொள்ளப்பட்ட செலவினம் (3) ஆ) 2025-2026-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்திற்கு பணிகள் தேர்வு செய்தல் குறித்து விவாதித்து அறிக்கை தயார் செய்து கிராம சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்தல். பொருள் 6 : ஜல் ஜீவன் இயக்கம் . ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10% சமூக பங்களிப்பினை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் விநியோக பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல். கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமையான விவரத்தினை கிராம சபையில் விரிவாக எடுத்துரைத்து இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். • பயிற்சி பெற்ற கிராம மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களை கொண்டு, ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள கள் ஆய்வு கருவிகளை (Field Test Kit) பயன்படுத்தி 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதி செய்தல். கிராம ஊராட்சியினை "வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பணிகளும் கட்டாயம் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தில் (VPDP) இடம்பெறுவதை உறுதி செய்தல். கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொதுகட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல். • குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் அரசாணை எண். 260, ஊ.வ (ம) ஊ.து, நாள்: 09.12.1998- . ன்படி செய்யப்பட்டுள்ள கட்டணம் நிர்ணயம் மாதாந்திர ரூ.30-க்கு குறையாமல் குடிநீர் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதி செய்தல். அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் "க்ளோரின் கலப்பான்" (Chlorinator) கருவிகளை பொருத்தி குடிநீரில் க்ளோரின் (Chlorine) கலப்பதை உறுதி செய்தல். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 % குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சியினை "வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிராம ஊராட்சித் மன்ற தலைவரால் சான்றிதழ் வழங்குதல். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட பின்னர் வீட்டின் குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணினை பெற்று ஜல் ஜீவன் இயக்க இணையத்தளத்தில் (IMIS-Portal) பதிவேற்றம் செய்வதை உறுதி செய்தல். பொருள் 7 : தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் அ) தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா (கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம்), திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக, தகுதி பெற்ற இளைஞர்களுக்கு (18 முதல் 35 வயதுடையவர்கள்) வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் தொடர்பாக தெரிவித்தல் தகுதியுடையவர்களிடமிருந்து கோருதல் விண்ணப்பம் தகவல் மற்றும் ஆ) தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 50 இளைஞர் திறன் திருவிழா மற்றும் 50 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்து விளக்குதல். திறன் பயிற்சி வேண்டுவோர் மற்றும் நேரடி வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களை இம்முகாம்களில் பயன்பெறுவது குறித்து தகவல் தெரிவித்தல். பொருள் 8 : கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு பங்கேற்று கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின்கீழ் தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் பங்களிப்புடன் ஏழை எளிய மக்களின் நலிவுற்ற தன்மையையும், வறுமையையும். குறைப்பதற்காக கீழ்க்கண்ட தலைப்புகளில் கிராம செழுமை மீட்சித் திட்டம் (Village Prosperity Resilience Plan) தயார் செய்யப்பட்டு வருகின்றது. 1. உரிமை சார்ந்த திட்டம் 2. வாழ்வாதாரம் சார்ந்த திட்டம் 3.பொது சொத்துக்கள், சேவைகள் மற்றும் வள மேம்பாட்டு திட்டம் 4. சமூக மேம்பாடு திட்டம் இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுவரும் கிராம செழுமை மீட்சித் திட்ட அறிக்கையினை பற்றி கிராம சபா கலந்துரையாடல் செய்யப்பட வேண்டும். கூட்டத்தில் பொருள் 9 : கூட்டாண்மை வாழ்வாதாரம் 2024-25 வாழ்வாதார திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் மாற்றம் அல்லது பெயர் சேர்த்தல் தொடர்பான விவரங்களை கூட்டத்தில் விவாதித்தல். பொருள் 10 : இதர பொருட்கள் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் ஏதேனும் பிற பொருட்கள் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டுவரப்படலாம் .
CLICK HERE TO DOWNLOAD கிராம சபைக் கூட்டம் - 23.11.2024 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.