ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 9, 2024

ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு



ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு

மயிலாடுதுறை நகராட்சி பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சில நாட்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் பெற்றோரை அழைத்து வர அறிவுறுத்தியதாகவும், பெற்றோரை அழைத்து வராததால் கடந்த 6ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவரை ஆசிரியர் தங்கப்பன் அடித்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவரை மீண்டும் ஆசிரியர் தங்கப்பன், தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் ஆகிய இருவரும் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

மனமடைந்த மாணவர், கடையில் எலி பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மாணவன் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு மாணவனை பார்க்க வந்த தலைமை ஆசிரியரை மாணவனின் தாயார் தாக்கினார்.

இந்நிலையில், மாணவரை அடித்த வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் மற்றும் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் ஆகியோர் மீது அடித்தல், ஆபாசமாக பேசுதல் 296(b), 115(iii) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.