சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபட உகந்த நேரம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 10, 2024

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபட உகந்த நேரம்!



சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபட உகந்த நேரம்!

இந்த வருடம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எதுவென்று தெரிந்துகொள்ளலாம்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.

உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மஹாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி.

முதல் மூன்று நாள்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையைப் பொதுமக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்து இல்லங்களிலும் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

பூச்சந்தைகளிலும் மக்கள் கூட்டம்கூட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரத்தை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்

புரட்டாசி 25 - 11.10.2024 - வெள்ளிக்கிழமை

காலை 06.00 - 07.30

காலை 09.00 - 10.30

மாலை 12.00 - 1.30

மாலை 4.30 - 6.00

மாலை 6,00 - 7.30 குழந்தைகளுக்கு அக்ஷரப்யாசம் பூஜை செய்ய உகந்த நேரம்

புரட்டாசி 25 - 11.10.2024 - வெள்ளிக்கிழமை

காலை 7.30 - 9.00

காலை 10.30 - 12.00

மாலை 12.00 - 1.30

மாலை 1.30 - 3.00

மாலை 4.30 - 6.00

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.