கோரிக்கை நிறைவேற்ற போராட்டம் - சிறப்பாசிரியர்கள் சங்கம் தீர்மானம்
திருவண்ணாமலையில் உள்ள கார்மேல் தொடக்கப் பள்ளியில் தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஹேமா, மாநில பொருளா ளர் திரிபுரசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
இக்கூட்டத்தில் உறுப் பினர் சேர்க்கை, புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி அடுத்த நடவடிக்கையாக முதல்வரை சந்திப்பது நடவடிக்கை குறித்த நடவடிக்கை மற்றும் கோரிக்கை நிறை வேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் சிவபெரு மான், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மதி வாணன், செயலாளர் ராஜா, பொருளாளர் தமிழ்ச்செல் வன், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.