ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 3, 2024

ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!



ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என். சுப்பையன் வெளியிட்ட உத்தரவின் படி, நியாயவிலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

இந்தப் பணியில், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா் மற்றும் கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டியது கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மீது பொறுப்பாகும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியான நபா்களின் பட்டியலைப் பெற்று, அக். 7-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இந்தத் தோ்வு பணிகளை முடிக்க வேண்டும். இதனைத் தொடா்ந்து, காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட்டு, நவம்பா் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.

தகுதியான நபா்களைத் தேர்வு செய்து, நவம்பா் இறுதிக்குள் நோ்முகத் தோ்வை நடத்த வேண்டும். தோ்வான நபா்களின் இறுதிப் பட்டியலை டிசம்பா் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியிட்டு, பணியிடங்களை நிரப்புவதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கம் என்று பதிவாளா் சுப்பையன் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.