Block Level Career Guidance Training 15.10.2024 - DSE Proceedings
2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் - விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 15.10.2024 அன்று நடைபெறுதல் - முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள்,
பொருள் :
சென்னை 6 ந.க.எண் 023758/பிடி2/இ1/2024, நாள் 14.10.2024. -
பள்ளிக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு — — அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 15.10.2024 அன்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை நடைபெறுதல் - மேற்கொள்ள தெரிவித்தல் - சார்ந்து.
பார்வை தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலரின் கடிதம்
ந.க.எண்.680/எல்1/சிஜி-70/2024, நாள்.14.09.2024
பார்வையில் காணும் கடிதத்தின் படி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல ஏதுவாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக,
1. தற்போது மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வட்டார உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் (Block level Career guidance resource centers) மூலமாக மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தப்பட உள்ளனர். 2. அதன் முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 130 வட்டாரங்களில் இருந்து இணைப்பில் கண்டுள்ள மேல்நிலை பள்ளிகளில் உள்ள 409 ஆசிரியர்கள் வட்டார அளவில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழி காட்டுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் பிற வட்டாரங்களிலும் இது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.
3. விருப்பம் தெரிவித்துள்ள 409 ஆசிரியர்களுக்கும் வருகின்ற 15.10.2024 அன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 1 ல் ஆசிரியர்கள் மற்றும் நடைபெறவிருக்கின்றது. (இணைப்பு — பள்ளிகளின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன)
4. 16 மாவட்டங்களிலிருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதி இருக்கக்கூடிய 131 மேல்நிலைப் பள்ளிகள் வட்டார உயர்கல்வி வழிகாட்டி மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தன் விருப்பத்தின் பெயரில் இத்திட்டத்தில் பங்கேற்று, அக்டோபர் 15 ஆம் தேதி பயிற்சி பெறவிருக்கின்ற அனைத்து ஆசிரியர்களும், அக்டோபர் 26.10.2024 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் உயர்கல்வி வழிகாட்டி மையங்களுக்குச் சென்று, மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்குதல் வேண்டும். விடுமுறை நாட்களில் பணி புரிவதற்காக சார்ந்த ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும்.
5. தற்போது 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் மேல்நிலைப்பள்ளிகளில் வாரந்தோறும் நடைபெறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளில் காட்டும் விருப்பம், ஆர்வம் மற்றும் பங்கேற்பின் அடிப்படையில், வட்டார அளவிலான இந்த உயர்கல்வி வழிகாட்டி மையங்களுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுவார்கள். ஒரு வேளை அவர்கள் வட்டாரத்தில் உயர்கல்வி வழிகாட்டி மையம் இல்லையெனில், அவர்கள் கற்கும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திலேயே இந்த கூடுதல் பாடத் தரவுகளைப் பெறவும், காணொளிகளைக் காணவும், பாடங்களைக் கற்கவும் பயிற்சித் தேர்வுகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுவார்கள். மாவட்டங்களை சார்ந்த மாவட்ட தலைமையாசிரியர்கள் பொறுப்புகள் :
ஒருங்கிணைப்பாளர்கள்
1. 130 வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 131 உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஏதேனும் சவால்கள் இருப்பின், பயிற்சி நடத்துவதற்கு அந்த வட்டாரத்தில் வேறு மையத்தைத் தெரிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு தெரிவு செய்து கொள்ளும் பட்சத்தில் உடனடியாக மாநில இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
2. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
3. பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாட்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வருகையினை உறுதி செய்தல் வேண்டும்.
4. 15.10.2024 அன்று மாதிரிப் பள்ளியில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி (Hi Tech Lab Administrative) அவர்களுக்கு பயணப்படி (Actual TA) வழங்குதல் வேண்டும்.
5. ஒவ்வொரு பயிற்சி வகுப்பிற்கான உள்ளடக்கங்களையும் பிரதியாக அச்சிட்டு, மாணவர்களுக்கு வழங்கும் வகையில் சார்ந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / தலைமையாசிரியர்கள் அனைவரும் வட்டார உயர்கல்வி மையங்களுக்கு அனுப்புதல் வேண்டும். (வகுப்பிற்கான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மாநில இயக்குநரகத்தில் இருந்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்) B. பயிற்சி பெறவிருக்கின்ற 409 ஆசிரியர்களுக்கான பொறுப்புகள் (Block Level Resource Persons) :
1. பயிற்சி பெறவிருக்கின்ற ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் உயர்கல்வி வழிகாட்டி மையங்களுக்கு சென்று 3 இல் வழங்கப்பட்டுள்ள பயிற்சிக்கான கால அட்டவணையின் படி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
இணைப்பு —
2. பயிற்சி பெற்ற பிறகு ஆசிரியர்கள் முதற்கட்டமாக, அக்டோபர் 26.10.2024 மற்றும் 02.11.2024 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தாக்க பயிற்சி (முதல் வாரம் 9 போட்டி தேர்வுகளுக்கும், இரண்டாம் வாரம் 10 போட்டித் தேர்வுகளுக்கும்) வழங்குதல் வேண்டும்.
3. கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் சார்ந்து ஏதேனும் சந்தேகங்கள் வரும் பட்சத்தில் இணைப்பு 4 ல் வழங்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களை சேர்ந்த 1 மாதிரிப் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை அணுகலாம்.
4. ஒவ்வொரு வாரம் பயிற்சி வகுப்பு நடைபெறுவதற்கு முன்பும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பு நடத்துவதற்கான உள்ளடக்கத்தை ( Content ) பெற்றுக் கொள்ள வேண்டும். C. உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகியின் பொறுப்புகள் (AI) :
1. பயிற்சி பெற்ற உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி (AI) வட்டார உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்தி பயிற்சிகள் வழங்குவதற்கு உகந்த ஏற்பாடுகள் செய்து கொடுத்தல் வேண்டும்.
2. போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான அனைத்து பாடத் திட்டமும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஏதேனும் பழுதடைந்து விட்டால் உடனடியாக உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் இருக்கின்ற தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு சரி செய்திடல் வேண்டும்.
D. வட்டார தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி மையமாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பொறுப்புகள் :
1. 131 வட்டார உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் இணைப்பு-2 இல் வழங்கப்பட்டுள்ளது.
அப்பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அனைவரும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் வழங்குவதற்கு தகுந்த அனுமதி வழங்குதல் வேண்டும்.
2. உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் பயிற்சி நடத்துவதற்கான கூட்டரங்கு மற்றும் பிற உபகரணங்கள் (Mike, Speaker, WiFi, Projector, Smart board, Hi-tech lab) பயிற்சி நடத்துவதற்கு ஏதுவாக ஒதுக்கீடு செய்து தருதல் வேண்டும். E. 16 மாவட்டங்களை சேர்ந்த மாதிரிப் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பொறுப்புகள் :
1. ஆசிரியர்கள், உயர்தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு (AI) அவர்களுக்கு பயிற்சி நடைபெறும் நாளன்று (15.10.2024) மாதிரிப் பள்ளியில் பயிற்சிக்கான கூட்டரங்கு, பங்கேற்பாளர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மற்றும் அவர்களுக்கான வருகை பதிவை பதிவு செய்தல் போன்ற ஒருங்கிணைப்புப் பணிகளை செய்தல் வேண்டும்.
2. அக்டோபர் 26.10.2024 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வார் வழிகாட்டி உயர்கல்வி சனிக்கிழமைகளிலும் மையங்களில் நடைபெறவிருக்கின்ற பயிற்சி வகுப்புகளில் வாரம் தோறும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பயிற்சி மையத்திற்குச் சென்று மேற்பார்வையிட வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை தீர்த்து வைக்க வேண்டும்.
எனவே, இணைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உயர்தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு (AI)_ உரிய தகவல்கள் அனுப்பி 15.10.2024 அன்று நடைபெறவிருக்கின்ற பயிற்சியில் அனைவரும் கலந்துகொள்வதனை உறுதி செய்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளின் விவரங்கள் :
1. விருப்பம் தெரிவித்துள்ள ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளின் விவரங்கள்
2. 131 வட்டார உயர்கல்வி வழிகாட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் விவரங்கள் மையங்களாக
3. பயிற்சி வகுப்பிற்கான கால நேரம் மற்றும் கால அட்டவணையின் விவரங்கள்
4. 16 மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் மாதிரிப் பள்ளிகள் முகவரி.
CLICK HERE TO DOWNLOAD Block Level Career Guidance Training Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.