புதுச்சேரி - இனி சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 23, 2024

புதுச்சேரி - இனி சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்



புதுச்சேரி - இனி சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்

இனி வரும் சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் காரணமாகவும் லோக்சபா தேர்தல் காரணமாகவும் கோடை விடுமுறை 12 நாட்கள் நீடிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் முழு நாளும் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி

கல்வி துறை அறிவித்து, பள்ளி இழப்பீட்டு வருகை நாட்களுக்கான அட்டவணையை வெளியிட்டது.

இதில் 5 சனிக்கிழமைகள் முழு நாளாக பள்ளிகள் இயங்கிய நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அதாவது, செப்- 21, 28, அக்-5, 19, 26, நவ -9, 23 ஆகியதேதிகளில்அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என கல்வித்துறை திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன்படி காலை 9.15 மணிக்கு காலை அணிவகுப்பு நடக்கும். இதனைதொடர்ந்து 9.30 மணி முதல் 10.10 மணி முதல் பாட வேளை, 10.10 முதல் 10.50 மணிவரை இரண்டாம் பாடவேளை, 10.50 முதல் 11.30 மணி வரை மூன்றாம் பாடவேளையில் வகுப்புகள் நடக்கும். 11.30 மணி முதல் 11.40 மணி வரை 10 நிமிடங்கள் மாணவர்களுக்கான இடைவெளி விடப்படும். தொடர்ந்து 11.40 மணி முதல் 12.20 மணிவரை நான்காம் பாடவேளை, 12.20 மணி முதல் 1 மணி வரை ஐந்தாம் பாட வேளை நடக்கும். ஒவ்வொரு பாட வேளையும் 40 நிமிடங்கள் கொண்டதாக நடத்தப்படும் என்று சனிக்கிழமைக்கான புதிய பாட அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார்.

கோடைக்காலத்தை போன்று வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து மிரட்டி வருகின்றது. சாலைகளிலும் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாகவே சனிக்கிழமை மட்டும் தற்போது அரைநாளாக பள்ளி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்றும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.