தீ விபத்து - தனியார் பள்ளி ஆசிரியைகள் இருவர் உயிரிழப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 12, 2024

தீ விபத்து - தனியார் பள்ளி ஆசிரியைகள் இருவர் உயிரிழப்பு



தீ விபத்து - தனியார் பள்ளி ஆசிரியைகள் இருவர் உயிரிழப்பு

மதுரையில் (செப்.12) அதிகாலையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியைகள் உயிரிழந்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த ஆடைகள் எரிந்து பிற அறைகளுக்கும் தீ பரவியது. மற்ற அறையில்இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். இருப்பினும், இந்த விபத்தில் வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா(22) ஆகியோர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து திடீர் நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்த விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி திடீர்நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.