TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 30, 2024

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு



TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை வெளிக்கிழமை வெளிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான)தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கு பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, மனத் திறன் அறிவு குறித்த வினாக்கள் இடம் பெறும், இரண்டாம் தாளில், பாடம் தொடர்பான வினாக்கள் இடம் பெறும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வு கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.