NILP - எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி... 065 - 01.09.2024 to 08.09.2024
சென்னை-06, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
முன்னிலை: முனைவர்.சு.நாகராஜ முருகன்
ந.க.எண். 065/ஆ2/2024 பொருள்:
பார்வை:
நாள் : .08.2024
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 202425 - உலக எழுத்தறிவுக் தினக் கொண்டாட்டங்கள் - 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - வழிகாட்டுதல்கள் - சார்பு
1. ஒன்றிய கல்வி அமைச்சக, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் அவர்களின் நே.மு.க எண் 14 - 1 /2023 - AE -2 நாள் 18.01.2024
2. திட்ட ஏற்பளிப்புக் கூட்டக்குறிப்புகள் அறிக்கை நாள் 09.04.2024
3. ஒன்றிய கல்வி அமைச்சக, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் அவர்களின் நே.மு.க எண் 6 - 2 /2024 - AE -1 நாள் 22.08.2024
*****
தமிழ்நாட்டில், 15 வயதுக்குமேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து 38 மாவட்டங்களிலும் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு 2024-25ஆம் ஆண்டில், இத்திட்ட முதற்கட்டத்தின் கீழ் 6:14 இலட்சம் கல்லாதோரைக் கண்டறியப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மையங்களில் அவர்களைச் சேர்த்து, 30,814 தன்னர்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்செயல்பாடுகளுடன் கற்போரையும், தன்னார்வலர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் வசிக்கும் பகுதி சார்ந்த தொழிற்திறன்களை வளர்த்தல், கற்போரிடையே உள்ள தனித்திறன்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்தல், புதிய அணுகுமுறையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளல், தேசிய மற்றும் மாநில அளவிலான திருநாட்களைக் கொண்டாடுதல் போன்ற செயல்பாடுகள் எழுத்தறிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, பார்வை-3ல் காணும் கடிதத்தின்படி, செப்டம்பர் 2024 மாதம் 8ஆம் நாள் அன்று உலக எழுத்தறிவு தினத்தை கொண்டாட அறிவுறுத்தப்படுள்ளது. இதன்படி, தமிழ்நாடு 100% எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்கிற உன்னத இலக்கை மையமாகக் கொண்டு வருகின்ற 01.09.2024 முதல் 08.09.2024 வரை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அனைத்து எழுத்தறிவு மையங்கள் அளவில் அனைத்து பள்ளி மாணவர்கள், கற்போர் மற்றும் தன்னார்வலர்கள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, 100% எழுத்தறிவு சார்ந்து உறுதி மொழி எடுத்தல், மரம் நடுதல், எழுத்தறிவைக் கருப்பொருளாக் கொண்ட சிறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை மாவட்டம், வட்டாரம் மற்றும் மையங்கள் அளவில் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஊக்குவிப்புடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிகழ்வுகளில் தங்களுடைய மாவட்டத்தை விரைவில் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றும் வகையில் மவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர், விரிவுரையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்று ஊக்குவிக்க வேண்டும்.
எனவே, முன்குறிப்பிடப்பட்டுள்ளபடி எழுத்தறிவு வார நிகழ்வுகளை அனைத்து மாவட்டம், வட்டாரம் மற்றும் எழுத்தறிவு மையங்கள் அளவில் சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அந்நிகழ்வுகள் சார்ந்த ஆவணத் தொகுப்பை இவ்வியக்ககத்திற்கு 20.09.2024க்குள் சமர்பிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: எழுத்தறிவு உறுதி மொழி
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-6
எழுத்தறிவு உறுதிமொழி
நமது எழுத்தறிவு இயக்கத்திற்கு எனது முழுப்பங்களிப்பையும் வழங்குவேன்.
அனைவரும் எழுத்தறிவு பெற எனது அறிவையும் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்துவேன். கற்போர்கள் எழுத்தறிவு பெற உற்சாகப்படுத்துவேன்.
மேலும், தமிழ்நாட்டின் அனைத்து குடிமக்களும் எழுத்தறிவு பெறுவதற்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்.
வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் !!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.