உடற்கல்வி ஆசிரியர் - உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 3, 2024

உடற்கல்வி ஆசிரியர் - உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



உடற்கல்வி ஆசிரியர் - உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் I உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பொருள்:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் நிலை 1 ஆகிய பணியிடங்கள் உபரி பணியிடங்கள் பணிநிரவல் செய்தல் - EMIS மூலம் கலந்தாய்வு நடத்துதல் - சார்ந்து.

பார்வை (5)ல் காணும் அரசாணையின்படி, கீழ்க்கண்டவாறு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியருடன் உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | பணியிடங்களை மாவட்டத்திற்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பணிநிரவல் செய்திடவும், ஆசிரியரின்றி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | பணியிடங்களை தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கவும் அரசின் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேற்காண் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | பணியிடங்களை நிர்ணயம் செய்து, அதனடிப்படையில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி பணிநிரவல் கலந்தாய்வினை நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | பணிநிரவல் கலந்தாய்வு வழிமுறைகள்

1.உபரி பணியிடங்களை கண்டறிதல்

1) பார்வை (5)ல் காணும் அரசாணையின்படி, முதன்மைக்கல்வி அலுவலர்களால் EMIS தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு இவ்வியக்ககத்திற்கு

அனுப்பப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரி கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | ஆசிரியர்களை முதலில் பள்ளி வாரியாக, அப்பள்ளியில் இறுதியாக பள்ளியில் சேர்ந்த நாளின் (Station Seniority) அடிப்படையில் பணிபுரியும் இடத்தில் இளையவர் (Station Junior) எனக் கண்டறிய வேண்டும்.

அப்பட்டியலை மாவட்ட அளவில் பணிநிரவல் செய்ய ஏதுவாக பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் அடிப்படையில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கில் கொண்டு பணிநிரவல் மாறுதலுக்கான பணிமூப்பு பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

2.பணிநிரவல் கலந்தாய்வு முன்னுரிமை (Priority) 1) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர். 2) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்.

3) இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர்.

4) விதவைகள்/மனைவியை இழந்தவர்கள், 40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் மற்றும் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் பணியாளர்கள்.

முன்னுரிமைக்குப்பின் (Priority) ஒன்றுக்கும் மேற்பட்டோர் இருப்பின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை.

1) ஆசிரியர் பணிபுரியும் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாள்.

2) பணிவரன்முறை நாள் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு ஒரே நாளாக இருந்தால் அவர்களுடைய பிறந்த நாள் கணக்கில் கொள்ள வேண்டும்.

3) பிறந்த நாள் ஒரே நாளாக இருந்தால் பெயரின் அகர வரிசைப்படி முன்னுரிமை வழங்க வேண்டும். 4. காலிப்பணியிடம்

நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களைஆவணங்களுடன் ஒப்பீடு செய்து முதன்மைக் கல்வி அலுவலர் தயார் செய்திட வேண்டும்.

5. கூடுதல் பணியிடம்

பார்வை (5)ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரியாகக் கண்டறியப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்கள் கூடுதல் பணியிடங்கள்.

6. கல்வித் தகவல் மேலாண்மை தளத்தில் பதிவேற்றம்.

ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களைக் கல்வித் தகவல் மேலாண்மை தளத்தில் (EMIS) மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்நுழைவின் மூலம் (CEO Login ID) பணிநிரவல் படிவத்தில் (Deployment Format) பணிநிரவலுக்கு உட்படுத்த வேண்டும். உபரி ஆசிரியர்களை முன்னுரிமை மற்றும் பணிமூப்பு வாரியாக (Priority wise & Seniority order wise) வரிசைகிரமமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியருடன் உபரி பணியிட விவரம், காலிப்பணியிடம் மற்றும் கூடுதல் பணியிட விவரங்களை 04.07.2024-க்குள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். CLICK HERE TO DOWNLOAD DSE - PET, PD 1 & PD 2 Deployment Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.