டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
அனுப்புநர்,
முனைவர். ச.கண்ணப்பன்,
பள்ளிக் கல்வி இயக்ககம்
பெறுநர்,
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
(மின் அஞ்சல் மூலமாக)
இயக்குநர்,
பள்ளிக் கல்வி இயக்ககம்,
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6
ந.க.எண்.040011/ஐ/இ1/2024
பொருள்
நாள் .07.2024 -
டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான - EMIS
பள்ளிக் கல்வி 05.09.2024 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் இணைய தளம் மூலம் பதிவேற்றம் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மாவட்டத் தேர்வுக்குழு அமைத்தல் - தொடர்பாக. - பார்வை: 1. அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை,
05.08.2022
2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி 040011/ஐ/இ1/2024, நாள் 12.07.2024
இயக்குநரின் நாள் கடிதம் ந.க.எண்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/ சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு அவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.10.000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், ரூ.2,500/- மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பார்வை 2-ல் காணும் இவ்வலுவலக கடிதத்தில், எதிர்வரும் 05.09.2024 அன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்திட 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம், மாவட்டத் தேர்வுக் குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பத்தி (ii) இல் தெரிவிக்கப்பட்ட மாவட்டத் தேர்வுக்குழுவினை கீழ்கண்டவாறு திருத்தி அமைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்படுகிறது. (ii) மாவட்டத் தேர்வுக்குழு வ.
பதவி எண் குழுவில் பதவி 1 முதன்மைக் கல்வி அலுவலர்
தலைவர்
23456 முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உறுப்பினர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுப்பினர் உறுப்பினர் உறுப்பினர் உறுப்பினர் மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர் உயர்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர் முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர்
எனவே மாநில நல்லாசிரியர் விருதுக்கு EMIS இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை மேற்கண்டவாறு மாவட்டத் தேர்வுக்குழு அமைத்து இணைப்பில் கண்ட சான்றில் மாவட்டத் தேர்வுக்குழுவின் ஒப்பம் பெற்று EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து மாநிலத் தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் 16.07.2024 அன்று முதல் 24.07.2024-க்குள் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 25.07.2024 முதல் 29.07.2024 வரை பதிவேற்றம் செய்திட கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட தகவலினை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Am 2017124
இயக்குநருக்காக,
சான்று
2024-25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்காக
திரு/திருமதி/செல்வி.
அவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார். இவ்விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர் / தலைமையாசிரியர் கல்வி, பணிக்காலத்திற்கான பதிவுகள் சரியாக உள்ளது என்றும், இவ்வாசிரியர் மீது எவ்விதமான சட்டரீதியான குற்றச்சாட்டுகள். விசாரணைகள், குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் துறை ரீதியாகவோ அல்லது வேறு எந்த முறையிலும் குற்றச்சாட்டுகள் ஏதும் நிலுவையில் இல்லை என்ற சான்று இதன் மூலம் அளிக்கப்படுகிறது.
மாவட்ட தேர்வுக்குழு தலைவர் / உறுப்பினர்கள் கையொப்பம் எண்
1.
முதன்மைக் கல்வி அலுவலர்
2. முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 3. மாவட்டக் கல்வி அலுவலர்கள்
4. மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்
5. உயர்நிலைப்பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்
6. முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர் CLICK HERE TO DOWNLOAD DSE - Date Extension - RK Award Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.