G.O 156 - BRTE post fixation - வட்டார , மாவட்ட அளவில் BRTE பணி இடங்கள் நிர்ணயம் செய்து அரசாணை (03.07.2024) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 8, 2024

G.O 156 - BRTE post fixation - வட்டார , மாவட்ட அளவில் BRTE பணி இடங்கள் நிர்ணயம் செய்து அரசாணை (03.07.2024)



வட்டார , மாவட்ட அளவில் ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்கள் நிர்ணயம் செய்து கல்வித்துறை செயலாளர் உத்தரவு

பள்ளிக் கல்வி - வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் நிர்ணயம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில / மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. ஆணை:-

மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், அனைவருக்கும் கல்வி திட்டமும் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமும் (RMSA) இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) என ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாணையில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டு (Staff Pattern) மற்றும் பயிற்றுநர்கள் இதன்படி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் கல்வி மாவட்ட பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 58 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

4. மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில். மாநில திட்ட இயக்ககத்திற்கு தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் மாவட்ட அளவில் அனுமதிக்கப்பட்ட 24 உதவி திட்ட அலுவலர் (மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணி நிலையில்) பணியிடங்கள் மாவட்டக் கல்வி கல்வி) அலுவலர் (தொடக்கக் பள்ளிக் ஒருங்கிணைந்த அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 5. மேலே ஆறாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், பள்ளிக் கல்வி இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்ககத்தில் பணிபுரிய 10 பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் வேண்டும் எனவும், தற்போது மாவட்ட திட்ட அலுவலகங்களில் பணியாற்றும் ஒருங்கிணைபாளர்களின் மாவட்ட எண்ணிக்கை அம்மாவட்டத்திலுள்ள எண்ணிக்கை வரை ஒன்றியங்களின் அடிப்படையில் 5 முதல் 13 அமைந்துள்ளது.

இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பணி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு உட்கூறு சார்ந்த ஒருங்கிணைப்புக்கு ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலவிரையம் ஏற்படுகிறது. மேலும், 5 முதல் 6 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி வசதி, எண்ணும் எழுத்தும், பள்ளி செல்லா குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், உயர்கல்வி வழிகாட்டுதல்கள், அனைத்து உண்டு உறைவிடப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் மற்றும் பிற உட்கூறுகள் சார்ந்த செயல்பாடுகளை மாநில திட்ட இயக்ககத்திலிருந்து கண்காணித்தலிலும் கடினமான நிலை உள்ளது எனவும், இந்நிலையினை நிவர்த்தி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் ஒரே எண்ணிக்கையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட கல்வியில் மேலும், பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படும் கஸ்தூரிபா காந்திபாலிகா வித்யாலயா பள்ளிகள் (KGBV) மற்றும் பள்ளி வசதி (ACCESS) வழங்குதல் சார்ந்து செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளிகள் அப்பள்ளிகளின் (NSCBAV) அமைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் வேண்டும்.

செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஏதுவாக கூடுதலாக ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடமும் எண்ணிக்கை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அனுமதித்து மாவட்ட நிர்ணயம் செய்யப்படுதல் 6. பள்ளிக் கல்வி இயக்குநர் மேலும் தனது கடிதத்தில், மாவட்ட திட்ட அலுவலகங்களில் அனைத்து உட்கூறுகள் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்க ஏதுவாக ஒரு மாவட்டத்திற்கு 7 ஆசிரியர் பயிற்றுநர்கள் வீதம் 266 பணியிடங்களும், மேற்கூறப்பட்ட உண்டுஉறைவிட பள்ளிகள் செயல்படும் 20 மாவட்டங்களில் இப்பள்ளி செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஏதுவாக ஒரு மாவட்டத்திற்கு 1 பணியிடம் வீதம் கூடுதலாக 20 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் என மொத்தமாக 286 பணியிடங்கள் மாவட்ட அளவில் நிர்ணயம் செய்தல் வேண்டும் எனவும், வட்டார கல்வி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிட்டு அப்பள்ளிகளின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தரத்தினை உயர்த்துதல் சார்ந்தும் அனைத்து 2958 குறுவள மையங்களும் IFHRMS அடிப்படையில் மாற்றி அமைக்க கோரப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போதுள்ள 414 ஒன்றியங்களில் IFHRMS அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள குறுவள மையங்களின் எண்ணிக்கை 3510 ஆகும். இக்குறுவள மையங்களில் பணிபுரிய ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியர் பயிற்றுநர் வீதம் 3510 பணியிடங்கள் நிர்ணயம் செய்திடல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

7. மேலும், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தொடக்கக் கல்வி) உதவித் திட்ட அலுவலர் பணியிடங்களில் பணிபுரியும் 59 பணியாளர்களை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும், 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும் தாய்துறைக்கே அனுப்பி வைக்க அனுமதி ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 8. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து அதனை ஏற்று கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

2024-25-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்யப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD G.O.(Ms) No.156, dt 3.7.2024 - BRTE post fixation Order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.