பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி கல்வியாண்டு பொதுமாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை பெற்றது - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் – சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் சென்னை-6 15.5.67.009839 / 41/2024 25.07.2024
பொருள் :
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 2024-25 கல்வியாண்டு பொதுமாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை பெற்றது - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் - சார்பு
பார்வை 1. அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை நாள் 17.12.2021
2. அரசுக் கடிதம் எண் 3835/பக5(1)/2024-1 பள்ளிக் கல்வித் துறை बी 29.04.2024
3. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.9839/டி1/2024 நாள் 07.05.2024. 22.06.2024 மற்றும் 08.07.2024
4. தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் 5.6.66.9839/141/2024 22.07.2024,
2024-25ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் நடத்திட அரசால் அனுமதிக்கப்பட்டதின் அடிப்படையில் பார்வை 3ல் காணும் 22.06.2024 தேதிய செயல்முறைகளின்படி கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேற்படி அட்டவனையின்படி 22.07.2024 முதல் 24.07.2024 முடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் ஆணை பார்வை 4-ல் வழங்கப்பட்டது.
மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேரும் பொருட்டு தற்போது பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்கவும்.
பணிபுரிந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்காத வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.