தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 24, 2024

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள் வெளியீடு.



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள் வெளியீடு.

2024-25 . அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள்- அறிவுரைகள் வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

பொருள்

பார்வை

ந.க.எண். 06924/கே2/2023, நாள்.23.07.2024

: தொடக்கக்கல்வி- 2024-25- அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் /ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கும் வகுப்பறையில் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள்- அறிவுரைகள் - வழங்குதல் - சார்பு

1. அரசாணை நிலை எண்.188 பள்ளிக் கல்வி (பக5(2)த் துறை நாள் 26.10.2023

2. இவ்வியக்கக கடிதம் ந.க.எண்.06924 /கே2/2023, நாள். 28.07.2024

3. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்.3676/A7/TAB/SS/2023 நாள்:12.07.2024

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்கிட அரசாணை பார்வை 1ல் கண்டுள்ளபடி வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மாநிலத் திட்ட இயக்ககம் மூலமாக வழங்கப்பட்ட கையடக்கக் கணினிகளை பாதுகாப்பாக பராமரிக்குமாறு பார்வை 2 ல் காணும் இவ்வியக்கக கடிதத்தின் வாயிலாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் /ஆசிரியர்கள் வகுப்பறை பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்கான வழிமுறைகள் பார்வை 3 ல் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதத்தில் இணைப்பு 1 மற்றும் 2 ல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மாறி வரும் கற்பித்தல் கற்றல் - கற்பித்தல் முறைகளுக்கேற்ப வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளைபயன்படுத்துவதற்கு இத்துடன் அனுப்பப்பட்டுள்ள இணைப்பு 1 மற்றும் 2 ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி)அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு: மேற்குறிப்பிட்டபடி

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி)

நகல்

மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

за தொடக்கக் கல்வி இயக்குநர்

72 2312124 இணைப்பு 1 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மடிக்கணினி (Laptop) மற்றும் கையடக்கக் கணினி (Tablet) - வகுப்பறை பயன்பாட்டு வழிமுறைகள் கையடக்கக் கணினியைக் கையாளும் வழிமுறைகள் மற்றும் பயன்பாடுகளை https://bit.ly/TabVideoSCERT என்ற இணைப்பின் (Link) மூலம் அறிந்துகொள்ளலாம்.

அல்லது விரைவுத் துலங்கள் குறியீட்டில் (QR) கொடுத்துள்ள காணொலியைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். வகுப்பறையில் கையடக்கக் கணினியின் தேடுபொறியின் தேடுபொறியின் (Search Engine) உதவியுடன் தகவல்கள் / காணொலிகள் / படங்கள் / ஓவியங்கள் போன்றவற்றைக் காண்பிக்கும் பொழுது Kids Mode-ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். > Kids Mode-ஐ தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை O

https://bit.ly/KidsSpaceSetting என்ற இணைப்பின் (Link) மூலம் அறிந்துகொள்ளலாம். > இணைய வழிப் பணிகள் மேற்கொள்ளும்பொழுது, கையடக்கக் கணினிகள், Wi-Fi அல்லது தடையில்லா இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை செய்துகொள்ள வேண்டும். > கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளை அறிமுகம் இல்லா Wi-Fi உடன் இணைத்துப் பயன்படுத்தக் கூடாது. > கையடக்கக் கணினிகளுக்கென வழங்கப்பட்டுள்ள SIM Card-ஐ மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

உறுதி கையடக்கக் கணினியில் Gmail Login ஆனது, பள்ளியின் Email ID-இல் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். Email ID இல்லாத பள்ளிகளில் பள்ளிகளுக்கெனத் தனிப்பட்ட Mail ID-ஐ உருவாக்கி கையடக்கக் கணினியில் பயன்படுத்திட வேண்டும். > கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் திறம்படச் செயல்பட அவ்வப்போது கையடக்கக் கணினி உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் மென்பொருள் புதுப்பித்தல் (Software Update) அமைப்புகளைத் தவறாது பதிவிறக்கம் (Download) செய்து நிறுவுதல் (Install) வேண்டும்.

> மடிக்கணினிகளில் பள்ளிகல்வித்துறை சார்ந்த மென்பொருள்கள் மற்றும் அவ்வப்போது பள்ளிகல்வித்துறையால் பரிந்துரைக்கப்படும் மென்பொருள்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும்.

கையடக்கக் கணினிகளில் பள்ளிகல்வித்துறை சார்ந்த செயலிகள் மற்றும் அவ்வப்போது பள்ளிகல்வித்துறையால் பரிந்துரைக்கப்படும் செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும்.

> ஆசிரியர்களின் பணிகளை எளிமைபடுத்த துறையால் பரிந்துரைக்கப்படும் செயலிகள்

பின்வருமாறு:

1) TNSED Schools

2) TNSED Parent @ (for SMC)

3) TNSED Attendance

4) TNSED Administrator

5) மணற்கேணி செயலி

நிறுவப்பட்டுள்ள செயலிகளுக்கு அவ்வப்போது Play Store-இல் வழங்கப்படும்

புதுப்பித்தல்களைப் (Update) பதிவிறக்கம் (Download) செய்து நிறுவிக்கொள்ள (Install) வேண்டும். ஆசிரியர்கள், கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளின் வாயிலாக மின்னொளிப் பேழையில் கொடுக்கப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் உபகரணங்களை (Digital-TLMs) வகுப்பறைகளில் பயன்படுத்த வேண்டும்.

> மாணவர்களுக்கான வளரறி (ஆ) (FA(b)] மதிப்பீட்டை கையடக்கக் கணினியின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

கையடக்கக் கணினிகள் மூலமாகத் தலைமையாசிரியர்கள்.

ஆசிரியர்களின் வருகைப்பதிவினையும் வகுப்பாசிரியர்கள் மாணவர்களின் வருகைப்பதிவினையும் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்குள் EMIS-இல் பதிவேற்றம் செய்திட வேண்டும். கையடக்கக் கணினியில் "மணற்கேணி" செயலியினைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான காணொலிகளைக் மாணவர்களுக்குக் காண்பிக்க வேண்டும்.

> கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளின் போது தேவைப்படும் இடங்களில் கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தப்படுத்த வேண்டும்.

இணைப்பு 2

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மடிக்கணினி (Laptop) மற்றும் கையடக்கக் கணினி (Tablet) - பராமரிப்பு வழிமுறைகள்

EMIS login மூலம் கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகள் பயன்பாட்டிற்கு ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவ்வாசிரியர், தமது EMIS login மூலம் கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகள் பெறப்பட்டதற்கான ஏற்பினை (Acknowledgement) வழங்கிட வேண்டும். பெறப்பட்ட கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் எவ்விதத் தொழில்நுட்பக் கோளாறுகள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினியின் செயல்முறைகளில் (Initial Configuration Setting) வழிகாட்டுதல்களின்படி முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

கையடக்கக் கணினிகளின் IMEI எண் மற்றும் மடிக்கணினிகளின் Serial எண்ணினை எதிர்காலப் பயன்பாட்டிற்காகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் தவிர்த்து, வேறு எவரும் வழங்கப்பட்டுள்ள கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்திடக் கூடாது.

கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளில் நாள்தோறும் பராமரிப்புச் சோதனைகளை மேற்கொண்டு அவை சுத்தமாகவும் தூசி இல்லாமலும் பராமரிக்க வேண்டும்.

கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளின் பயன்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க எவையேனும் தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிந்தால் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தல் பணிகளில் கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினியினைப் பயன்படுத்தும்போது அதன் மின்கலன் (Battery) போதிய மின்னாற்றலுடன் (Charge)உள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளின் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி உற்பத்தியாளர்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே மின்னேற்றம் (Charge) செய்திட வேண்டும். கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினியுடன் வழங்கப்பட்ட மின்னேற்றியை (Charger) மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

வகுப்பறைக்குள் பயன்படுத்தும்போது கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளைப் கட்டாயம் மின்னேற்றம் (Charger) செய்துகொண்டே பயன்படுத்தக் கூடாது. மேலும் மின்னேற்றியின் (Charger) இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மின்னேற்றம் (charge) செய்யப் பயன்படும் மின்சார அமைப்புகள் (Electrical Structure) நல்லமுறையில் இருந்திட வேண்டும். எதிர்பாரா நிகழ்வுகளைத் தவிர்க்க மாணவர்களை எக்காரணம் கொண்டும் இப்பணிகளில் ஈடுபடுத்துதல் கூடாது.

கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளை மாலைநேரத்தில் முறையாக Switch Off / Shut down செய்து, காலையில் மீண்டும் Switch On/ Restart செய்து பயன்படுத்த வேண்டும்.

Sim card-ன் பயன்பாட்டிற்கென மாதம் F110/-, பள்ளி மானியத்திலிருந்து (School Grants) செலவிடப்பட வேண்டும். ஜூன்-2024 மாதத்திற்கான மானியம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2024 முதல் மார்ச் 2025-க்கான மானியமும் வழங்கப்படும். CLICK HERE TO DOWNLOAD Internet Charge Guidelines - DEE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.