கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை மார்ச் - 2025 வரை தொகுப்பூதியம் மூலம் தொடர அனுமதியளித்து அரசாணை வெளியீடு!
1661 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை மார்ச் - 2025 வரை தொகுப்பூதியம் மூலம் தொடர அனுமதியளித்து அரசாணை வெளியீடு! உயர்கல்வித் துறை - சுருக்கம் - கல்லூரிக்கல்வி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் "சுழற்சி-II வகுப்புகள்" 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் தொடர அனுமதி அளித்தல் - ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் / உழைப்பூதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. அரசாணை (ப) எண்.171 உயர்கல்வி (ஜி1)த் துறை நாள் 23.07.2024 குரோதி வருடம், ஆடி-7. திருவள்ளுவர் ஆண்டு, 2055. படிக்கப்பட்டவை:- 1. அரசாணை (நிலை) எண்.207, உயர்கல்வி (ஜி1) துறை, நாள் 31.08.2018. 2. அரசாணை (நிலை) எண்.151, உயர்கல்வி (ஜி1) துறை, நாள் 24.10.2020. 3. அரசாணை (நிலை) எண்.197, உயர்கல்வி (ஜி1) துறை, நாள் 22.06.2023. 4. அரசாணை (நிலை) எண்.261, உயர்கல்வி (ஜ1) துறை, நாள் 02.09.2023. 5. கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.13529/என்2/2024, நாள் 22.05.2024. ஆணை:- மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், சுழற்சி-II பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 1661 கௌரவ விரிவுரையாளர்களை மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.20,000/- என்ற அடிப்படையில் ஏப்ரல் 2023, முதல் மார்ச் 2024 வரை (மே 2023 தவிர்த்து) 11 மாதங்களுக்கு பணியமர்த்த அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது. அதற்கென ரூ.36,54,20,000/- (ரூபாய் முப்பத்தாறு கோடியே ஐம்பத்து நான்கு இலட்சத்து இருபதாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடும், ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் / உழைப்பூதியம் வழங்க ரூ.32,50,800/- (ரூபாய் முப்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து எண்ணூறு மட்டும்) நிதி ..2 -2- ஒதுக்கீடும், ஆகமொத்தம் ரூ.36,86,70,800/-ஐ (ரூபாய் முப்பத்தாறு கோடியே எண்பத்தாறு இலட்சத்து எழுபதாயிரத்து எண்ணூறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (சுழற்சி-1 மற்றும் சுழற்சி-II) மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியத்தினை ரூ.20,000/-லிருந்து ரூ.25,000/- ஆக 01.06.2023 முதல் உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டன. 3. மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், கல்லூரிக் கல்வி இயக்குநர், அரசு கல்லூரிகளில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி-II-ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 1661 கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதியும், அவர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000/- வீதம், 11 மாதங்களுக்கு (11 × 25000 × 1661) ரூ.45,67,75,000/- நிதி ஒதுக்கீடு வழங்குமாறும் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு உழைப்பூதியமாக ரூ.32,50,800/-ஆக மொத்தம் ரூ.46,00,25,800/-ஐ (ரூபாய் நாற்பத்து ஆறு கோடியே இருபத்தைந்தாயிரத்து எண்ணூறு மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து உரிய ஆணை வழங்குமாறும் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 4. மேலே பத்தி 3-ல் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயற்குறிப்பினை அரசு கவனமாக ஆய்வு செய்து, அதனடிப்படையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கு 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், சுழற்சி-II பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 1661 கௌரவ விரிவுரையாளர்களை மாதம் ரூ.25,000/- வீதம் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை (மே 2024 தவிர்த்து) 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்காலிகமாக தொடர அனுமதியும், அதற்கான செலவினமாக ரூ.45,67,75,000/- நிதி ஒதுக்கீடும், இதே போன்று ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு ரூ.32,50,800/- நிதி ஒதுக்கீடும் ஆகமொத்தம் ரூ.46,00,25,800/-ஐ (ரூபாய் நாற்பத்து ஆறு கோடியே இருபத்தைந்தாயிரத்து எண்ணூறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. i) 1661 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்கள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் பணியிடங்கள் தொடரப்பட வேண்டும். ..3 i தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதங்கள் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும் நிலையிலோ அப்பணியிடம் அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும். கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கான நியமனங்கள் மேலே முதலாவது மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலே பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- வஎண். கணக்குத் தலைப்பு 1. ஆடவர் கல்லூரிகள் 2202 — தொகை (ரூபாய்) பொதுக்கல்வி 03 பல்கலைக் கழகக் கல்வியும் உயர்கல்வியும் - 103 அரசு 11 × 25,000x 1124 கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் மாநிலச் செலவினங்கள் - AA கலைக் கல்லூரிகள் (ஆடவர்) 333 தொழில் முறை சிறப்பு பணிகளுக்குத் தொகை கொடுத்தல் 02 — ஊதியம். (த.தொ.கு. =30,91,00,000/- 2202-03-103-AA-33302) மகளிர் கல்லூரிகள் 2. 2202 - பொதுக்கல்வி 03 பல்கலைக் - கழகக் கல்வியும் உயர்கல்வியும் – 103 அரசு 11 × 25,000 x 537 - கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் மாநிலச் செலவினங்கள் AB கலைக் கல்லூரிகள் (மகளிர்) - 333 தொழில் முறை சிறப்பு பணிகளுக்குத் தொகை கொடுத்தல் - 02- ஊதியம். (த.தொ.கு. 2202-03-103- AB-33302) =14,76,75,000/- ..4 6. ஆசிரியரல்லாப் பணியாளர்கள் (ஆடவர் கல்லூரிகள்) 2202 - பொதுக்கல்வி - 03 பல்கலைக் 22,30,200/- கழகக் கல்வியும் உயர்கல்வியும் – 103 அரசு - கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் மாநிலச் செலவினங்கள் AA கலைக் - கல்லூரிகள் (ஆடவர்) - 301 301 சம்பளங்கள் (த.தொ.கு.2202-03-103-AA-30100) ஆசிரியரல்லாப் பணியாளர்கள் (மகளிர் கல்லூரிகள் 2202 — பொதுக்கல்வி = 03 பல்கலைக் - கழகக் கல்வியும் உயர்கல்வியும் - 103 அரசு கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் மாநிலச் செலவினங்கள் - AB - கலைக் கல்லூரிகள் (மகளிர்) 301 சம்பளங்கள். 1 (த.தொ.கு.2202-03-103-AB-30100) 10,20,600/- மொத்தம் 46,00,25,800/- மேலே பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. 7. இவ்வாணை நிதித் துறையிடம் துறையிடம் 19.07.2024-ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. பெறுநர் (ஆணைப்படி அனுப்பப்படுகிறது) பிரதீப் யாதவ் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கல்லூரிக் கல்வி இயக்குநர், சென்னை-15. அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் (கல்லூரிக் கல்வி இயக்குநர் வழியாக) சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் (கல்லூரிக் கல்வி இயக்குநர் வழியாக) மாநிலக் கணக்காயர், சென்னை-18. சம்பள கணக்கு அலுவலர், சென்னை-1/5/35 மற்றும் சம்பந்தப்பட்ட கருவூல/சார்நிலைக் கருவூல அலுவலர்கள் ..5 நகல் -5- உயர்கல்வித் துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை-9. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் தனிச் செயலர், சென்னை-9. நிதி (கல்வி-1)/வ.செ.பொ.II/வ.வ.1 துறை, சென்னை-9. இருப்புக் கோப்பு / உதிரி. சுத்த நகல் கோப்பிற்கு (கோ.எண்.1454/ஜி1/2024) // ஆணைப்படி / அனுப்பப்படுகிறது // மூ.சுதா பிரிவு அலுவலர் 123/07/24 இணைப்பு அரசாணை (டி) எண்.171, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 23.07.2024 வ. எண் பணியிடங்களின் பெயர் பணியிடங்களின் தொகை எண்ணிக்கை X ரூ. தொகுப்பூதியம் X வேலை நாட்கள் 59X Rs.50X180 5,31,000/- 1. கண்காணிப்பாளர் 2. உதவியாளர் / இளநிலை 117X Rs.50X180 10,53,000/- உதவியாளர் / காசாளர் 3. ஆய்வக உதவியாளர் 92X Rs.50X180 8,28,000/- 4. அலுவலக உதவியாளர் 59X Rs.20X180 2,12,400/- 5. பெருக்குபவர் 58X Rs.20X180 2,08,800/- 6. துப்புரவாளர் 116X Rs.20X180 4,17,600/- மொத்தம் 32,50,800/- பிரதீப் யாதவ் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் // உண்மை நகல்// மூ.சுதா பிரிவு அலுவலர் Pastorby 23/07/24 சுருக்கம் உயர்கல்வித் துறை - கல்லூரிக்கல்வி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி-I வகுப்புகள் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் தொடர அனுமதி தொகுப்பூதியம் வழங்குதல் அளித்தல் - வெளியிடப்படுகின்றன. அரசாணை (டி) எண்.172 - - ஒப்பளிப்பு ஆணைகள் உயர்கல்வி (ஜி1) துறை நாள் 23.07.2024 குரோதி வருடம், ஆடி-7. திருவள்ளுவர் ஆண்டு, 2055. படிக்கப்பட்டவை:- 1. அரசாணை (நிலை) எண்.195, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 21.06.2023. 2. அரசாணை (நிலை) எண்.261, உயர்கல்வி (ஜூ1)த் துறை, நாள் 02.09.2023. 3. அரசாணை (நிலை) எண்.239, உயர்கல்வி(ஜி1)த் துறை, நாள் 05.09.2023. 4. அரசாணை (நிலை) எண்.303 உயர்கல்வி(ஜி1)த் துறை, I56r 11.12.2023. 5. அரசாணை (நிலை) எண்.304, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 11.12.2023. 6. அரசாணை (நிலை) எண்.27, உயர்கல்வி(ஜி1)த் துறை, நாள் 09.02.2024. 7. அரசாணை (நிலை) எண்.28, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 22.03.2024 8. கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.15383/டி2/2024, நாள் 20.06.2024. ஆணை:- மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு சுழற்சி--ல் பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 5699 கௌரவ விரிவுரையாளர்களை மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.20,000/- என்ற அடிப்படையில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை (மே 2023 தவிர்த்து) 11 மாதங்களுக்கு பணியமர்த்த அனுமதியும் அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.125,37,80,000/- (நூற்று இருபத்தைந்து கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (சுழற்சி-I மற்றும் சுழற்சி-II) மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியத்தினை ரூ.20,000/-லிருந்து ரூ.25,000/-ஆக 01.06.2023 முதல் உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டன. 3. மேலே மூன்று முதல் ஏழு வரை படிக்கப்பட்ட அரசாணைகளில் பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர்களின் பணியிடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 746 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது. 4. மேலே எட்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், கல்லூரிக் கல்வி இயக்குநர், அரசு கல்லூரிகளில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி--ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 6445 கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதியும், அவர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000/- வீதம், 11 மாதங்களுக்கு (11 × 25000 X 6455) ரூ.177,23,75,000/- (ரூபாய் நூற்று எழுபத்தி ஏழு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து உரிய ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 5. மேலே பத்தி 3-ல் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்ததில், அக்கருத்துருவில் குறிப்பிடப்பட்டுள்ள 6445 கௌரவ விரிவுரையாளர்களில், மேலே மூன்று முதல் ஏழு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின் வாயிலாக நிரப்ப அனுமதிக்கப்பட்ட 746(10+283+423+19+11) கெளரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாத நிலையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், சுழற்சி-I பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 5699 கெளரவ விரிவுரையாளர்களை மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000/- என்ற அடிப்படையில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை (மே 2024 தவிர்த்து) 11 மாதங்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்காலிகமாக தொடர அனுமதியும், அதற்கான செலவினமாக ..3 -3- ரூ.156,72,25,000/- (ரூபாய் நூற்று ஐம்பத்து ஆறு கோடியே எழுபத்து இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. i) ii) iii) உரிய 5699 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உ விதிகளின் அடிப்படையில் தொடரப்பட வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதம் வீதம் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும் நிலையிலோ அப்பணியிடம் அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும். கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கான நியமனங்கள், அரசாணை (நிலை) எண்.207, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 31.08.2018, அரசாணை (நிலை) எண்.151, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 24.10.2020 மற்றும் அரசாணை (நிலை) எண்.269, உயர்கல்வி (ஜி1)த் துறை. நாள் 25.11.2022 ஆகிய அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். 6. மேலே பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- கணக்குத் தலைப்பு 2202 பொதுக் கல்வி - 03 கௌரவ விரிவுரையாளர் எண்ணிக்கை தொகுப்பூதியம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய தொகை (ரூ.) (11 மாதங்களுக்கு) பல்கலைக் கழகக் கல்வியும் உயர் கல்வியும் கல்லூரிகளும், நிறுவனங்களும் செலவினங்கள் - 103 அரசு கல்வி மாநிலச் AA கலைக் கல்லூரிகள் (ஆடவர்) -33 தொழில் முறை சிறப்புப் பணிகளுக்கு தொகை கொடுத்தல் - 02 ஊதியம் (த.தொ.கு.2202- 03- 103- AA 33302) 4293 4293 x 25000 ரூ.118,05,75,000/- x11 ..4 2202 - பொதுக் கல்வி பல்கலைக்கழகக் உயர்கல்வியும் கல்லூரிகளும் நிறுவனங்களும் கல்வியும் 103 அரசு 1 கல்வி மாநிலச் செலவினங்கள் AB கலைக் - கல்லூரிகள் (மகளிர்) தொழில்முறை பணிகளுக்கு -4- 1356 - 33 — சிறப்புப் தொகை கொடுத்தல் 02 ஊதியம் (த. - தொ.கு. 2202 - 03 - 103- AB தொ.கு.2202 33302) 2202 - பொதுக் கல்வி பல்கலைக்கழகக் உயர்கல்வியும் கல்லூரிகளும் - - 03 கல்வியும் 103 அரசு கல்வி நிறுவனங்களும் செலவினங்கள் கல்வியியல் 1356x 25000 x11 ரூ.37,29,00,000/- மாநிலச் AC 31 கல்லூரிகள் 31 × 25000 x 11 ரூ.85,25,000/- (ஆடவர்) 33. தொழில் முறை சிறப்புப் பணிகளுக்கு தொகை கொடுத்தல் 1 02 ஊதியம் (த.தொ.கு.2202 -03- 103- AC 33302) 2202 - பொதுக் கல்வி - 03 பல்கலைக்கழகக் கல்வியும் உயர்கல்வியும் கல்லூரிகளும் 103 அரசு கல்வி நிறுவனங்களும் செலவினங்கள் மாநிலச் AD 19 19 × 25000 x ரூ.52,25,000/- 11 கல்வியியல் கல்லூரிகள் (மகளிர்) 33. தொழில் முறை சிறப்புப் பணிகளுக்கு கொடுத்தல் தொகை 02 ஊதியம் (த.தொ.கு.2202- 03- 103- AD 33302) 5699 5699 X 25000X11 ரூ.156,72,25,000/- ..5 -5- 7. மேலே பத்தி 5-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. 8. இவ்வாணை நிதித் துறையிடம் 19.07.2024-ல் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. பெறப்பட்ட (ஆளுநரின் ஆணைப்படி) பிரதீப் யாதவ் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெறுநர் கல்லூரிக் கல்வி இயக்குநர், சென்னை-15. அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் (கல்லூரிக் கல்வி இயக்குநர் வழியாக) சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் (கல்லூரிக் கல்வி இயக்குநர் வழியாக) மாநிலக் கணக்காயர், சென்னை-18. சம்பள கணக்கு அலுவலர், சென்னை-1 / 5 / 35 மற்றும் சம்பந்தப்பட்ட கருவூல/சார்நிலைக் கருவூல அலுவலர்கள் நகல் உயர்கல்வித் துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை-9. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் தனிச் செயலர், சென்னை-9. நிதி (கல்வி-1)/வ.செ.பொ.II/வ.வ.I துறை, சென்னை-9. இருப்புக் கோப்பு / உதிரி. சுத்த நகல் கோப்பிற்கு (கோ.எண்.efile No.1803/ஜி1/2024) // ஆணைப்படி / அனுப்பப்படுகிறது// CLICK HERE TO DOWNLOAD Guest Lecturers Post Continuation Order PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.