தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்:14257 / கே2 / 2023
நாள் : 12.07.2024.
பொருள்: தொடக்கக் கல்வி -2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் -
அறிவிப்பு எண்.8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் முதன்மைக் கருத்தாளர் பயிற்சி மதுரை மாவட்டம், நாகமலைப்புதுக்கோட்டை, பில்லர் வளாகத்தில் 33- தொகுதிகளுக்கு நடைபெறுதல் - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. பார்வை:
1. பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண். 43,
அறிவிப்புகள் 2023-2024, அறிவிப்பு எண்.8
2. இவ்வியக்கக இதே எண்ணிட்ட 8.8.2023 மற்றும் 13.03.2024 நாளிட்ட செயல்முறைகள்.
பார்வை (1)ல் காணும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.
பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின்படி, 2023-24 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 05.10.2023 முதல் 27.04.2024 முடிய 40 தொகுதிகளாக (40 Batches) மதுரை மாவட்டம், பில்லர் சாலை நாகமலைப் புதுக்கோட்டை, பில்லர் மையத்தில் e:\k section\k2\selvam k2\14257 2023 35847 hms traning\hm training 11.07.2024.doc நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டு, அதன்படி 18.03.2024 முதல் 23.03.2024 வரையிலான நாட்களில் 32 தொகுதிகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024-25 ஆம் கல்வி ஆண்டில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியானது 18.07.2024 முதல் 05.10.2024 வரை 33-46 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. எனவே, மேற்காண் பயிற்சிக்கு இணைப்பு 1 மற்றும் 2 ல் இடம்பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதன்மைக் கருத்தாளர்கள், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் நடைபெறும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்வதற்கு தேவையான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குவதோடு, குறிப்பிடப்பட்ட நாட்களில் தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இப்பயிற்சியில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1) இணைப்பில் கண்டுள்ளவாறு தொகுதிவாரியாக (Batchwise) நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டின்படி பயிற்சி தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இரவு 8.30 மணிக்குள்ளாகவோ அல்லது பயிற்சி தொடங்கும் நாளன்று காலை 6.00 மணி முதல் 8.00மணிக்குள்ளாகவோ பயிற்சி மையத்திற்கு வருகை புரிய வேண்டும்.
2) பயிற்சியில் கலந்து கொள்ளும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தங்கும் இடவசதி மற்றும் உணவு வசதி ஆகியன ஏற்பாடு செய்து தரப்படும். e:\k section\k2\selvam k2\14257 2023 35847 hms traning\hm training 11.07.2024.doc
3) பயிற்சி தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவு 9.00 மணி வரை மட்டுமே இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்.
4) பயிற்சி நடைபெறும் நாட்களில் பயிற்சி மையத்தை விட்டு வெளியே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் பில்லர் மையத்தில் இரவு 9.00 மணியிலிருந்து காலை 6.00 மணி வரை யாரும் உள்ளே வரவோ அல்லது வெளியே செல்லவோ அனுமதி கிடையாது.
5) நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூன்று நாட்கள் பயிற்சி நிறைவடைந்த பிறகு மாலை 7.00 மணிக்கு பின்னரே பயிற்சி வளாகத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
6) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி நாட்களுக்கு மாற்றாக வேறு நாட்களில் பயிற்சியில் பங்கேற்க, ஒரு தலைமை ஆசிரியருக்கு மாற்றாக மற்றொரு தலைமை ஆசிரியர் பங்கேற்க அனுமதி கேட்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி உரிய தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) உறுதி செய்திட வேண்டும். 7) பயிற்சியில் கலந்து கொள்ள வரும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (Bank pass book first page account detail ie A/c No., IFSC number, Branch name, etc..). பயணச்சீட்டு நகல் (Travel ticket copy) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photo) ஆகியவற்றை தங்களுடன் எடுத்து வர வேண்டும்.
8) ஆசிரியர்கள் யோக பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவான உடை (Casual dress) மற்றும் தரை விரிப்பு துணியை (Mat or towel or bed sheet) தங்களுடன் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும் அனைத்து சுற்றுகளிலும் மதுரை மற்றும் திருமங்கலம் தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்கள் பயிற்சி நடத்தும் கருத்தாளர்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு:
1. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் பட்டியல்
2 முதன்மைக் கருத்தாளர் பெயர் பட்டியல்
CLICK HERE TO DOWNLOAD Proceedings PDF
CLICK HERE TO DOWNLOAD participant list - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.