624 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதம் ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 29, 2024

624 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதம் ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!



624 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதம் ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

624 தற்காலிகப் பணியிடங்களுக்கு 26 (Model Schools - KI Head) 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

பெறுநர்

அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள் /சார் கருவூல அலுவலர்கள். சம்பளக் கணக்கு அலுவலர்கள், சென்னை-01 / 08 / 35. சம்பந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலர்கள்.

ஐயா,

பொருள்:

பள்ளிக்கல்வி 26/07/2024 இ3 -அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக கல்வியில் பின் தங்கிய 26 ஒன்றியங்களில் 20 மாதிரிப் பள்ளிகள் 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 624 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை Authorization) வழங்கக் கோருதல்-சார்பு.

பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.47, (Pay அரசாணை (நிலை) எண்.47, பள்ளிக்கல்வி சி(2)த்துறை, நாள்.20.03.2013.

2. அரசாணை (1டி) எண்.140, பள்ளிக் பள்ளிக் கல்வி பக5(1)துறை, நாள்.23.08.2021.

3. பள்ளிக் கல்வி இயக்குநரின் செய்ல்முறை ந.க. எண். 011657 /எல்/இ3/2021, நாள்.13.03.2024.

4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித இ3/2021, நாள்.02.07.2024. ந.க.எண்.011657/எல் பார்வை 1-இல் காணும் அரசாணையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக 11 மாவட்டங்களில் கல்வியில் பின்தங்கியுள்ள 26 ஒன்றியங்களில் 26 மாதிரிப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகள் கல்வியாண்டில் தொடங்கிடவும், இம்மாதிரிப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 17 ஆசிரியர் மற்றும் 7 ஆசிரியரல்லாத பணியிடங்கள் 624 பணியிடங்களைத் தோற்றுவித்தும் கொண்ட பள்ளிகளாக, ஆணைகள் அரசாணையில் என் 2013-2014 ஆம் வெளியிடப்பட்டன என்றும் பார்வை 624 இத்தற்காலிக 2-இல் காணும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில், பார்வை 3 -இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order) வழங்கப்பட்டுள்ளது என்றும் இப்பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு பெற கால தாமதம் ஆகும் நிலையில் 01.07.2024 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

2. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேற்குறிப்பிட்டுள்ள 624 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரப் 3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதி(சம்பளம்)த் துறை, நாள். 22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு பகிர்வின்படி வெளியிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD 624 Posts Pay Authorization - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.