202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
திரு.சோ.மதுமதி, இ.ஆ.ப.,
அரசு செயலாளர்.
பெறுநர்
அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள் /சார் கருவூல அலுவலர்கள். சம்பளக் கணக்கு அலுவலர்கள், சென்னை-01 / 08 / 35. சம்பந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலர்கள்.
ஐயா,
-
பொருள் பள்ளிக்கல்வி மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தினை (IEDSS) செயல்படுத்தி 202 சிறப்பு கல்வியியல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது-தற்போது 01.07.2024 முதல் 30.09.2024 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்கக் கோருதல் - சார்பு. பார்வை:
பட்டதாரி 1. அரசாணை (நிலை) எண்.28, பள்ளிக் கல்வி பக5(2)த்துறை, நாள்.30.01.2015.
2. அரசாணை (1டி) எண்.138, பள்ளிக் கல்வி பக5(1)த்துறை, நாள்.23.08.2021.
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை கள் கடித ந.க. எண்.000690/எல்/ இ3/2021, நாள்.08.03.2024.
4. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.000690 /எல்/ இ3/2018, நாள்.02.07.2024.
பார்வை 1-இல் காணும் அரசாணையில் அரசு உயர்நிலை/மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழங்நதைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (IEDSS) கீழ் ரூ.9300-34800 தர ஊதியம் ரூ.4,600/- என்ற ஊதிய விகிதத்தில், 202 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவித்தும், இவ்வாறு தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட வேண்டும் எனவும் இப்பணியிடங்களுக்கான செலவினத் தொகை முழுமையும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் (RMSA) மத்திய அரசிடம் பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கியும் ஆணையிடப்பட்டது. பார்வை 2-இல் காணும் அரசாணையில் மேலே 26/02/24 இ3 முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 59 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில், அதில் 58 பட்டதாரி ஆசிரியர் மட்டுமே பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர் எனவும், மீதம் உள்ள 144 சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வருங்காலங்களில் பணியிட தேவைக்கேற்ப படிப்படியாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வி நடத்தி, தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு போட்டித் தேர்வு மூலமாக தெரிவு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த பிறகுதான் தொடர் நீட்டிப்பு ஆணை பெறப்பட வேண்டும் என்றும் நிரப்பப்பட்ட 58 பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பார்வை 3 -இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order) வழங்கப்பட்டுள்ளது என்றும் 01.07.2024 முதல் 31.12.2024 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். 2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேற்குறிப்பிட்டுள்ள 58 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதி(சம்பளம்)த் துறை, நாள். 22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வின்படி வெளியிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD 202 BT Assistant Post Pay Athorization Order PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.