உபரியாகப் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 19, 2024

உபரியாகப் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி



அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் உபரியாகப் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி , உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது . அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் 1973 மற்றும் விதிகள் 1974

அரசாணை (நிலை) எண்.231, பள்ளிக்கல்வி (சி2) துறை, நாள்.11.08.2010. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பள்ளிக்கல்வித் துறையால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு W.A.(M.D)No.76 of 2019-இன் தீர்ப்பாணை நாள் 31.03.2021.

தொடக்கக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 004126/எச்/ஜி/2024, நாள். 22.05.2024

ஆணை,

மாணவர்களின் உள்ள எண்ணிக்கையைக் கணக்கில் 5018 கொண்டு, மேலே ஐந்தாவதாக படிக்கப்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் நிதியுதவிபெறும் தொடக்கப்பள்ளிகளும், 1496 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருவதாகவும், மேலே இரண்டாவதாக படிக்கப்பட் அரசாணையின்படி மேற்படி பள்ளிகளில் 01.08. அன்றைய நிலவரப்படி ஆண்டுதோறும் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலர்களால் (தொடக்கக்கல்வி) ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது என்றும், மேற்காண் அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகளுக்கு கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மான்யம் ஆண்டுதோறும் அரசால் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், 2023-2024 ஆம் ஆண்டிற்கு மாணவர்களின் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு மாவட்டக்கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக்கல்வி) தொகுப்பறிக்கைகள் கீழ்க்கண்டுள்ளவாறு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 3. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசுநிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியருடன் உபரியாக 5546 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 299 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், மொத்தம் 5845 பணியிடங்கள் உபரியாக ஆசிரியருடன் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து, மேற்படி உபரியாகப் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தொடர்ந்து அதேபள்ளியில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில், அரசு மான்யம் விரயமாவதுடன், தேவையில்லாத நிதியிழப்பு ஏற்படுகிறது என்றும், இதனைச் சுட்டிக்காட்டி பல்வேறு தணிக்கைத் தடைகள் மாநிலக் கணக்காயரால் எழுப்பப்பட்டுள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை 4. மேலும், உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பள்ளிக்கல்வித்துறையால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு W.A.(M.D)No.76 of 2019-இன் தீர்ப்பாணையில் பத்தி 95 (v)-இல் பின்வருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

insofar as aided minority institutions are concerned, if it is a stand alone institution, their right of appointing a teacher in a vacancy within the sanctioned strength for the academic year 2021-22 shall not be affected because of the identified excess teachers in other schools. At the same time, even if the school is a minority institution, however being administered by a joint management or corporate management, in respect of those schools, even though vacancy arose within the sanctioned strength of such school or schools under corporate management or joint management, those vacancies shall not be filled up unless the excess staff identified in all other schools under the same corporate or joint management are exhausted fully and only after exhausting the redeployment process on all excess teachers identified in the group of schools under the same corporate management, they shall be free to make appointment afresh from open market in the vacancy if any still, within the sanctioned strength." 5. அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும், உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டுவரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும், மேற்காண் தீர்ப்பாணைப்படியும் மற்றும் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் தனியார் (ஒழுங்குபடுத்தும்) விதிகள் 2023-இல் விதி எண்.32.B-இன்படியும், அரசு நிதியுதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மற்றும் மாற்றுப்பணி வழங்குவது குறித்து உரிய ஆணை வழங்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

6. தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமாக பரிசீலனை செய்த அரசு அதனை ஏற்று, அரசு நிதியுதவிபெறும் (Aided) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் உபரியாகப் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, பணிபுரிந்துவரும் இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதித்து பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடலாம் எனக் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

அக்கூட்டுமேலாண்மையில் உபரியாக பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை அதே மேலாண்மையின் கீழ் செயல்படும் பிற பள்ளிகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிரப்பதகுந்த காலிப்பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்யப்படவேண்டும்.

அவ்வாறு பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி ஆசிரியர்களை முதலில் வட்டாரத்திற்குள்ளும், வட்டாரத்திற்குள் தகுதியான காலிப்பணியிடம் இல்லை எனில் மாவட்டத்திற்குள்ளும் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். பணிநிரவலுக்கு உட்படும் ஆசிரியர் விருப்பப்பட்டால் மாவட்டத்திற்கு வெளியே பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.

(iii) ஒரு கூட்டுமேலாண்மையின் கீழ் செயல்படும் நிகழ்வில், உபரி ஆசிரியர்களை பணியிடங்களுடன் மேற்படி உதவிபெறும் பிரிவில் பயிலும் (Aided) மாணவர்கள் எண்ணிக்கை மிகுவதால் தேவை ஏற்படும் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு பணிநிரவல் பணியிடம் வழங்கப்படுவதால் அம்மேலாண்மையின் கீழ் செயல்படும் உதவிபெறும் பள்ளிகளுக்கென அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்னிக்கைக்கு மேல் பணிநிரவல் மிகுதல் கூடாது. (iv) பணிநிரவல் மேற்கொள்ளும்போது பணியில் இளையவர், பிற நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள நிரப்பத்தகுந்த காலிப் பணியிடத்திற்கு பணிநிரவல் செய்யப்பட வேண்டும். பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி ஆசிரியராக செய்யப்பட கண்டறியப்பட்டவர்களில் மூத்தவர்க்கு முதலில் பணிநிரவல் வேண்டும்.

(v) ஒவ்வொரு தனி மேலாண்மைப் பள்ளியும், ஒரு மேலாண்மைப் பள்ளியும், ஒரு அலகாக கருதப்படுவதால் அத்தனிமேலாண்மையில் உபரியாக பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை அவர்தம் விருப்பத்தின் பேரில், பிற நிதியுதவிபெறும் பள்ளிகளில் உள்ள தகுதியான காலிப்பணியிடங்களுக்கு அப்பள்ளிநிர்வாகம் / பள்ளிக்குழு ஒப்புதல் பெற்று பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.

(vi) அவ்வாறு பணிநிரவல் மேற்கொள்ளும்போது ஆசிரியர் தற்போது பணிபுரியும் பள்ளியின் அருகாமையில், வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு வட்டாரத்திற்குள் பள்ளி இல்லை எனில் மாவட்டத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். பணிநிரவல் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(vii) மாணவர் சேர்க்கையின்மை காரணமாக செயல்படாமல் உள்ள (Zero Enrolment) நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தகுதியான காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். அதன்பிறகும் மீதமுள்ள ஆசிரியர்களை பிற அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி மூலம் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் நிலையில் மாற்றுப்பணியை இரத்து செய்து தாய்பள்ளிக்கு பணியில் மூதுரிமை உள்ள ஆசிரியரை திரும்ப அனுப்பவேண்டும்.

(viii) பணிநிரவல் online வழியாக EMIS இணையதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உரிய பதிவுகள் அத்தளத்தில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். நிதியுதவிபெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் மாற்றுப்பணியில் அனுப்பப்படும்போது அவர்பணியில் இளையவராக இருக்கவேண்டும்.

மாற்றுப்பணியில் அனுப்பப்படும் ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் நிலையில் மாற்றுப்பணியில் சென்ற மூத்த ஆசிரியர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து அவரை தாய்ப்பள்ளியில் திரும்ப பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை அதிகம் உள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் அனுமதிக்கப்பட வேண்டும்.

உள்ள பள்ளிகளுக்கு அதன் பிறகும் உபரி ஆசிரியர்கள் இருப்பின், அவ்வுபரி ஆசிரியர்களை அரசு மாதிரிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் பணியிடம் வகுப்புகளுக்கு ஆசிரியர் அனுமதிக்கப்படாமல் மாற்றுப் பணியில் பணிபுரிய அரசுப்பள்ளிகளில் ஏற்படும் மாற்றுப்பணி ஆணைபெற்று அனுமதிக்கப்பட வேண்டும்.

மேலும், காலிப்பணியிடத்தில் மூன்றாண்டுகளுக்கு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றிவரும்போது ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய நியமனம் ஆகிய நேர்வுகள் தவிர வேறு வகையில் அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது.

மாற்றுப்பணியானது மூன்றாண்டுகளுக்கு மேற்படும் நிகழ்வைப் பொறுத்தவரை அவரது பணி பாதிக்கப்படாமல் மாற்றுப் பணியானது நீட்டிக்கப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD G.O. No.139 - Date : 19.06.2024 Deployment - Aided School PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.