அரசு திட்டங்களால் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு - தமிழக அரசு பெருமிதம்
: தமிழ்நாடு அர சின் திட்டங்களால், தொடக் சுப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து, அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார் பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக்கு வரும் குழந்தை கள் காலையில் பசியுடன் படிப் பைத் தொடங்கக் கூடாது என் பதைக் கருத்தில் கொண்டு அர சின் சார்பில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 18.54 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இந் தத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2.50 லட்சம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற் குத் தேவையான ரூ.600 கோடி நிதியும் நிகழ் நிதியாண்டில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை பிற மாநி லங்களும், கனடா போன்ற நாடு களும் செயல்படுத்த முன்வந்துள் ளது. திட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமும் வெற் றியுமாகும்.
கரோனா காலத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்ற லைத் தடுக்க இல்லம் தேடிக் கல் வித் திட்டம் நடைமுறைப்ப டுத்தப்பட்டது. இந்தத் திட்டத் தின் மூலம் 24 லட்சம் குழந்தை கள் பயன்பெற்று வருகின்றனர். தொடக்கப் பள்ளி மாணவர்க ளின் வாசித்தல், எழுதுதல் திறன் களை அதிகரிக்க, எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத் தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத் தின்கீழ், 22.27 லட்சம் மாணவர் கள் பயனடைந்து வருகின்றனர். அத்துடன் தொடக்கப் பள்ளிக ளில் ரூ.435.68 கோடியில் திறன் மிகு வகுப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களால் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
[Press Release No : 686 ] From School Education Department - PDF
கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ .590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம் ரூ .101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் .1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது! கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!👇
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.