தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பீகார் கல்விக்குழு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 7, 2024

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பீகார் கல்விக்குழு



தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பீகார் கல்விக்குழு

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 5 நாள் பயணமாக, 40 பேர் கொண்ட பீகார் மாநில கல்விக்குழு சென்னை வந்தடைந்தனர்.

இன்று முதல் நாளில், பள்ளிக் கல்வித்துறையின் அமைப்பு அதன் செயல்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

குறிப்பாக கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது, என்னென்ன நிகழ்ச்சிகள் அங்கு தயாரிக்கப்படுகிறது. எவ்வாறு படப்பிடிப்புகள் நடத்தப்படுகிறது குறித்து அவர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அதே போல் பாடப்புத்தகங்கள் வண்ணமயமாக எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. நாளை பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.

புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், தகைசால் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதற்கு முன்னதாக தெலுங்கானாவில் இருந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து தெலுங்கானாவில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.