பள்ளிகளுக்கு இணைய கட்டணம்: ரூ.12.74 கோடி விடுவிப்பு
தமிழகத்தில் 21,349 அரசு தொடக்கப் பள்ளிகள், 6,990 நடு நிலைப் பள்ளிகளுக்கு மூன்று மாதங்க ளுக்கான இணைய வசதிக் கட்டணம் ரூ.12.74 கோடி விடுவிக்கப்பட்டுள் ளது.
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற் றறிக்கை:
தமிழகத்தில் 2023-24-ஆம் கல்வி யாண்டில் 21,349 தொடக்கப் பள்ளிக ளில் திறன் வகுப்பறைகளும், 6,990 நடு நிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பகணினி ஆய்வகங்களும் அமைக் கப்பட்டுள்ளன.
இதற்கு இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதிக்கு கட்டண
மாக ஒரு மாதத்துக்கு ரூ.1,500 வீதம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்க ளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியிலிருந்து பெறப்பட்ட தொகை யில் 21,349 தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல்
முதல் ஜூன் வரை 3 மாதங்க ளுக்கு ரூ.9 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரத்து 500-ம்; 6,990 நடுநிலைப்பள் ளிகளுக்கு 3 மாதங்களுக்கு ரூ.3 கோ டியே 14 லட்சத்து 64 ஆயிரமும் நிதி விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் வங் கிக் கணக்குக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் விடுவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
Saturday, May 25, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.