"எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 31, 2024

"எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.SCHOOL CLEANLINESS WORK ACTIVITIES AND CONTINUATION ACTIVITIES – 03.06.2024 to 05.06.2024 Implementation dependent DSE & DEE Co-Processes! பள்ளித் தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் - 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் சார்ந்து DSE & DEE இணைச் செயல்முறைகள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின்

இணைச் செயல்முறைகள், சென்னை-600 006

ந.க.எண். 079119/எம்/இ1/2023, நாள். .05.2024

பொருள்: பள்ளிக் கல்வி "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. பார்வை:

1. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் நேர்முக கடிதம் எண். 10988/GL1 (2)/2023 28.08.2023 நாள்.

2. சென்னை-06, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண் 213/ஆ3/கலை/ஒபக/2023 நாள். 16.11.2023.

3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 76094/ அ4/ இ4/ 2023, நாள்.20.12.2023.

4. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 079119/எம்/ இ1/2023. நாள். 11.09.2023 மற்றும் 02.01.2024.

5. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 17605/எம்/இ1/2023. நாள்.24.05.2024.

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற திட்டம் செயல்படும்.

இத்திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக பள்ளித் திறக்கும் நாள் முதல் ஜீன் மாதத்தில் 03.06.2024 முதல் 05.06.2024 வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் எதிர்வரும் 03.06.2024 முதல் 05.06.2024 வரை ஆகிய நாட்களில் பள்ளி வளாகத்தில் பின்வரும் தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. பள்ளித் தூய்மைப்பணி நடவடிக்கைகள்

பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைத் தூய்மை

அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வண்ணம் இருப்பதை உறுதி செய்தல்.

> ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல்.

> பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல்.

> புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல். >

பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல்.

காலை / மதிய உணவு திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல்.

> பள்ளி வளாகத்தில் நீர் தேங்காவண்ணம் சுற்றுப்புறம் மேடு பள்ளம் இன்றி சமப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளல்.

> அனைத்து வகுப்றைகளும் சுத்தம் செய்து, நன்றாக நீரால் தூய்மை செய்து பள்ளியில் உள்ள கட்டிடங்களும் வளாகமும் தூய்மையாக மிளிரச் செய்ய வேண்டும்.

> பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தல் கூடாது.

> பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் திடக் கழிவுகளை ஒப்படைத்தல்.

> தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திட வேண்டும்.

நிதி ஆதாரம்

> அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பள்ளி மான்யம் அல்லது பராமரிப்பு மான்யத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி காய்கறித் தோட்டம் ECO Club அமைத்திட வழங்கப்பட்டுள்ள நிதியின் ஒரு பகுதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

>தொண்டு நோக்கில் தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பள்ளிப் பணியில் ஆர்வம் உள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியோர் துணையுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

> உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிறத்துறைகளின் பணிகளை ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் சிறப்பு முயற்சிகள் மூலம் பணிகளை மேற்கொள்ளலாம்.

பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR Fund) பங்களிப்பு ஆகியனவற்றையும் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளலாம்.

ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொள்ளலாம்.

முன் ஆயத்த நடவடிக்கைகள்

> மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி இச்சிறப்பு பள்ளி தூய்மைப் பணியினை சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

> அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் விவாதித்து உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். > "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் 03.06.2024 முதல் 05.06.2024 வரை ஆகிய நாட்களில் சிறப்பு செயல்பாடாக பள்ளி வளாகத் தூய்மைப் பணிகளை செயல்படுத்துவதற்கான ஏற்கனவே நடைமுறையிலுள்ள மாவட்ட, வட்டார மற்றும் பள்ளி அளவிலான குழுக்களின் கூட்டத்தினை நடத்தி உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

> மாவட்ட அளவிளான குழுக்கூட்டத்தினை நடத்தப்படவேண்டும்.

சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், தன்னார்வளர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் பங்கேற்போடு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட நடவ்டிக்கைகளை பள்ளி அளவிலான குழு மேற்கொள்ள வேண்டும்.

உரிய பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இச்சிறப்பு தூய்மைப் பணி சார்ந்து பணிகள் நடைபெறுவதற்கு முன், பணிகள் நடைபெறும் பொழுது மற்றும் பணிகள் முடிவுற்ற பின் புகைப்படம் எடுத்து School Login பயன்படுத்தி EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

சிறப்பு பள்ளி தூய்மை பணி கண்காணித்தல்

மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மை பணிகள் : நடைபெறும் நாளன்று அலுவலர்கள் பார்வையிடத்தக்க வகையில் திட்டமிட்டு பணிகள் சார்ந்த விவரத்துடன் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கண்காணித்தலை உறுதி செய்திடல் வேண்டும். அலுவலர் வாரியாக பார்வையிடப்பட வேண்டிய குறைந்தபட்ச பள்ளிகள் எண்ணிக்கை பின்வருமாறு, பார்வையிடப் பட வேண்டிய குறைந்தபட்ச பள்ளிகளின் எண்ணிக்கை

அலுவலர்

முதன்மை கல்வி அலுவலர்

மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)

பள்ளிகளின் எண்ணிக்கை

10 15 15 15 மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

வட்டார வளமைய மேற்பார்வையாளர்

20 வட்டார கல்வி அலுவலர்

20 20 ஆசிரியர் பயிற்றுநர் கட்டிட பொறியாளர் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்

பள்ளிகள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட உள்ள சிறப்புத் தூய்மைப் பணியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கட்டிடப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் முன்னின்று ஒருங்கிணைத்து பள்ளிகளை பார்வையிட்டு சிறந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து அனைத்து அரசுப் பள்ளிகளையும் தூய்மையான மிளிரும் பள்ளிகளாக உருவாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு- பார்வை (1) கடிதம் நகல்.

தொடக்க கல்வி இயக்குநர்

பெறுநர்:

1. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள். பள்ளிக் கல்வி இயக்குநர் 30.5-24

2. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி).

3. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை). 4. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்).

நகல்:

1. அரசுச் செயலர், பள்ளி கல்வித் துறை.தலைமைச் செயலகம், சென்னை. அவர்களுக்குத் தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

2. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை - 06.

3. உறுப்பினர் செயலர், மாதிரி பள்ளிகள், சென்னை. CLICK HERE TO DOWNLOAD DSE - Mass Cleaning of Schools 3rd June to 5th June 2024 Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.