பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 17, 2024

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு



100 சதவீத தேர்ச்சி : ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு பாராட்டு விழா - Appreciation ceremony for teachers and head teachers who passed 100% in public examination! - Notification of School Education Department

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற 43 மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 397 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில், 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் 87.90 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. 1,364 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. தமிழில் மட்டும், எட்டு பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, 1,761 பள்ளி கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிகளின் 43 மாணவர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து, குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்குவதுடன், 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன், கருத்து பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டம்

ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவர்களும் பாராட்டப்படுகிறார்கள்

மேலும் அவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் வாங்கிய 43 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்

-பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.