ஏப்.23-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சங்கீதா Local Holiday on 23rd Apr - District Collector Sangeetha
ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.
ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
Monday, April 15, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.