மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி:

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் நேற்று பதிவானதாக அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி; தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு என நேற்று இரவு 7 மணிக்கு அறிவித்த நிலையில் பிறகு 69.46% என மாற்றி அறிவித்தது தேர்தல் ஆணையம்

கடந்த நான்கு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிலவரம்.

➡️2009 மக்களவை 73.02%

➡️2014 மக்களவை 73.74%

➡️2019 மக்களவை 72. 47%

➡️2024 மக்களவை 69.45%

தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி GELS 2024 PC Wise Poll Turnout at 07.00PM

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 62.02 % வாக்குகள் பதிவு

GELS 2024 PC Wise Poll Turnout at 05.00PM

தமிழ்நாட்டில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 62.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 72.85% வாக்குபதிவு

GELS 2024 PC Wise Poll Turnout at 03.00PM

தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

பகல் 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தருமபுரியில் 57.86%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47% வாக்குப்பதிவு

GELS 2024 PC Wise Poll Turnout at 01.00PM

மக்களவை தேர்தல் - பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது

பகல் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08%,

குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளன



GELS 2024 - PC Wise Poll Turnout at 9.00 AM

தமிழகத்தில் காலை 9 மணி வரை 12.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

GELS 2024 - PC Wise Poll Turnout at 11.00 AM

தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்பௌடி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.



தமிழகத்தில் 1 மணி நிலவரம்:

40.05 % வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக தருமபுரியில் 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 32.31 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

நாகை தொகுதியில் 42.05 சதவீதமும், தூத்துக்குடியில் 39.11 சதவீதமும், திருச்சியில் 38.14 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 35.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது.

கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.